இப்பொழுது 20 வயது இளைஞர்களுக்கு கூட இருதய அடைப்பு வந்துவிடுகிறது. உடனே ஸ்கேன் செய்யுங்க.. ஆஞ்சியோ பண்ணுங்க.. என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்து சில பல டெஸ்ட்டுகள் எடுத்து, அதிகமான மருத்துவ செலவுகளை செய்ய வேண்டியுள்ளது. பொதுவாகவே இதய இரத்தக் குழாய் அடைப்புக்கு கெட்ட கொழுப்பு சேர்வதுதான் காரணமாக கூறப்படுகிறது. இதற்கு இயற்கை மருத்துவத்தில் தீர்வு உண்டா என்றால், நிச்சயம் உண்டு. கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல சூரணம் செய்து சாப்பிட்டால் இரத்தக் குழாய் அடைப்பு என்ன, பைபாஸ் சர்ஜரியை கூட நிறுத்தி விடலாம். அந்தளவுக்கு வீரியமிக்க மருந்தாக இந்த சூரணம் உள்ளது.
இரத்தக் குழாய் அடைப்பு குணமாக சூரணம்
- உலர்ந்த பூண்டு 10 கிராம்
- வால் மிளகு 20 கிராம்
- லவங்கபட்டை 35 கிராம்
- செம்பருத்தி பூ 50 கிராம்
- தாமரை பூ 50 கிராம்
- சென்பக பூ 50 கிராம்
- சீரகம் 100 கிராம்
- மருதம் பட்டை 125 கிராம்
- ஆளி விதை 125 கிராம்
- சியா விதை 125 கிராம்
- நத்தை சூரி விதை 125 கிராம்
- காசினி விதை 125 கிராம்
- வெள்ளரி விதை 125 கிராம்
- கழற்ச்சி பருப்பு 125 கிராம்
- இஞ்சி மேல் தோல் சீவி நறுக்கியது 250 கிராம்
சூரணம் செய்முறை
இஞ்சி மேல் தோல் சீவி சிறு துண்டுகளாக்கி 250 கிராம் எடுத்து ஓர் தட்டில் பரப்பி அதன் மேல் சீரகம் 100 கிராம் எடுத்து பரவலாக போட்டு அதன் மேல் எலுமிச்சம் சார் பரவலாக விட்டு சூரிய ஒளியில் நன்கு காய வைத்து சூரணம் செய்து எடுக்கவும், அதனுடன் மற்ற எல்லா பொருட்களையும் நீழலில் உலர்த்தி சூரணம் செய்து ஒன்றோடு ஒன்றாக கலந்து எடுத்து பத்திர படுத்தவும்.
சூரணம் கசாயம் செய்து சாப்பிட வேண்டிய அளவு
மேற்படி செய்த சூரணம் ஒரு ஸ்பூன் போட்டு 200 மில்லி நீரில் கொதிக்க வைத்து 60 மில்லியாக சுண்ட வைத்து காலை, மாலை உணவுக்கு முன் குடித்து வரவும் 15 முதல் 48 தினம் சாப்பிட வேண்டும்.
Post a Comment
Post a Comment