மாரடைப்பை தவிர்க்க இது தான் மிகச்சிறந்த வழி ! செய்து பாருங்களேன். உங்கள் வாழ்நாளில் மாரடைப்பு வரவே வராது !!!

Post a Comment

இன்றைய உலகில் பல்வேறு நோய்கள் மனிதர்களை தாக்குகிறது. புதுபுது நோய்களால் ஏராளமனோர் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

மாரடைப்பு என்பது திடீரென ஏற்பட்டுஉயிரை பறிக்கும் ஒரு கொடிய நோய். முறைப்படி உடலை பேணிக்காத்தால் இதை தடுக்கலாம்.

மனிதன் வளர வளர கரோனரி தமனிகள் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதியில் உள்ள ரத்தக்குழாய்களில் கொலஸ்ட்ரால் படிகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இவ்வாறு ரத்த ஓட்டப்பாதை குறுகுவது அதிரொஸ்கிலிரோஸிஸ் என்றழைக்கப்படுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது.

பெண்களைவிட ஆண்களுக்குத்தான் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் ஆகியவை பெண்களை மாரடைப்பிலிருந்து பாதுகாக்கின்றன. இவை பெண்களுக்கு மெனொபாஸ் எனும் மாதவிடாய் நிற்கும் காலம்வரை இருக்கும்.மேலும் இந்தியர்கள் மற்றும் ஆசியர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மாரடைப்பு ஏற்படுவது ஏன்?புகைப்பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், அதிக உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமை.

*குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு, மன அழுத்தம், படபடப்பு, அதிக கோபம் போன்றவைகள்.

அறிகுறிகள்

*மாரடைப்பின் அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்வது சற்று கடினம். அவை பிற அறிகுறிகளை போன்று ஒத்திருக்கலாம்.

*நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம்.

*மார்பின் முன் பகுதியிலோ அல்லது நெஞ்சுக்கூட்டின் பின்புறமோ வலி இருக்கலாம்.

*வாந்தி, இருமல், படபடப்பு மற்றும்20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் வலி.

*தீவிர நிலையில், ரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டவரின் உடல் வெளுத்து இறப்பும் நேரலாம்.நோயைக் கண்டறிவது எப்படி

*இதயத்தின் செயல்பாடுகளை மின்னணு வடிவில் பெற்றுத் தரும் இசிஜி எடுக்கப்படுகிறது. இசிஜி மூலம் இதயத்துடிப்பின் வேகம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

*வழக்கத்திற்கு மாறான துடிப்புகள் உள்ளனவா என்றும், மாரடைப்பால் இதய தசைகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் இசிஜி மூலம் அறியலாம்.

maradiappai thadukka valigal


*ஆரம்ப நிலையில் இசிஜி சீராக இருப்பதால் மாரடைப்பிற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கூற முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

*இதயதசைகளில் பாதிப்பு உள்ளதா எனக் கண்டறிய ரத்த பரிசோதனைகள் உதவும். மார்பு பகுதியில் எக்ஸ்ரே எடுக்கப்படலாம். எக்கோகார்டியோகிராம் என்பது இதயத்தின் செயல்பாடுகளை அறிய உதவும் புதிய ஸ்கேன் முறை. கரோனரி ஆஞ்ஜியோகிராம் என்ற பரிசோதனை கரோனரி ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதா என்பதை உறுதியாக கண்டறிய முடியும்.

முதலுதவி சிகிச்சை

*மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ கவனிப்பும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் அவசியம்.

*மாரடைப்பு ஏற்படும் ஆரம்ப காலகட்டத்தில் ஒவ்வொரு நிமிடமும் இக்கட்டானவை. முதலில் கரோனரி தமனி எனப்படும் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள கட்டியைக் கரைக்கும் மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

*நைட்ரோக்ளிசிரைன் அல்லது ஸார்பிட்ரேட் மாத்திரைகள் கிடைக்கப்பெற்றால் ஒன்றிரண்டு மாத்திரைகளை நோயாளியின் நாக்கின் அடியில் வைக்கவேண்டும்.

*நீரில் கரைக்கப்பட்ட நிலையில் அஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம்.

*நோயாளியின் வயது, மாரடைப்பின் தாக்கம், இதயம் பாதிக்கப்பட்டுள்ள அளவு மற்றும் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அளவு ஆகியவற்றை பொறுத்து நோயாளிக்கு மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை மாறுபடும்.

*சிகிச்சை அளிக்கும்போது நோயாளிகளின் இறுக்கமான உடைகளை தளர்த்தி பின்னர் படுக்கையில் படுக்க வைக்க வேண்டும்.

*பல நேரங்களில் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க தெளிவான மற்றும் முறையான வழிமுறைகள் அவசியமாகின்றன. அவை கரோனரி ஆஞ்சியோப்ளாஸ்டி, பலூன்களை கொண்டு ரத்தக்குழாய்களை விரிவடைய செய்தல் அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற முறைகளாக இருக்கலாம்.

*மாரடைப்பிற்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதன் மூலம் பெரும் பாலும் உயிரிழப்பைத் தவிர்க்கலாம்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter