இந்த மீன் சாப்பிடுங்க ! இதய நோய் வராது ! இரத்த நாளங்கள்ல அடைப்பு வராது..!

Post a Comment
இந்த #கரோனா யுகத்திலும், கடல் மீன்களை சாப்பிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் மக்கள். காரணம் அது பல விதத்தில் உடலுக்கு நன்மை செய்வதால்தான். மீன்கள் பொறுத்தவரை ஒமேகா என்ற நன்மை செய்யும் பொருள் இருப்பதால் இதயத்திற்கு நல்லது.

பொதுவாக கடல் உணவுகள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயம். அதிலும் மீனில் மருத்துவ குணங்கள் ஏராளம்.

மீனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால், எந்த வியாதிகளும் நம்மை அண்டாது என்பது மருத்துவர்களின் விளக்கம். மேலும் அதிகமாக புரோட்டீன் சத்துகளை கொண்ட மீனில் உள்ள “ஓமேகா 3” என்ற ஒரு வகை ஆசிட் உள்ளது.

இந்த ஆசிட் உடலில் எந்த நோயும் நெருங்காமல் இருக்க பெரிதும் உதவுகிறது. மீனின் மகத்துவங்கள் மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது. எந்தெந்த மீன்கள், எப்படி நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.


ithaya noi unavu


வெள்ளை மீன்கள் உணவுகளை காட்டிலும் கறுப்பு மீன்கள், சாலமன் மீன்கள், இதர துனா போன்ற மீன்கள் சிறந்த பலன் அளிக்கும். நினைவுத்திறன் குறைபாடு, நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல நோய்கள் குணமடையும். மீன் எண்ணெய்யை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவு குறையும். இந்த எண்ணெய் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாகவும் அழகாக பொலிவோடு இருக்கவும் உதவும்.

பயன்கள்


ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் வராது. இதை அடிக்கடி சாப்பிடுவதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது. ஆஸ்துமாவை விரட்ட சிறந்த மருந்து.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter