உங்கள் வீட்டு குழந்தைகளின் நினைவு திறன், பெரியவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்க, ஏன் உங்களுக்கு கூட சில நேரங்களில் ஏற்படும் அதீத மறதி ஆகியவற்றை போக்கி அதிக நினைவுத்திறனையும், மூளையின் செயல்திறனையும் அதிகரிக்க வல்ல சூரணம் இது. எப்படி செய்வது? எந்தளவு பயன்படுத்துவது என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.
மூளை செயல் திறன் அதிகரிக்கவும், பலமடையவும் லேகியம்
செய்முறை
லேகியம் செய்ய தேவையான தேவையானவை
- பருத்தி விதைப்பருப்பு - 35 கிராம்
- வாதுமைப் பருப்பு - 35 கிராம்
- சாரப்பருப்பு - 10 கிராம்
- கசகசா - 10 கிராம்
- ஏலக்காய் - 5 கிராம்
- மூங்கிலுப்பு - 5 கிராம்
- ஜாதிபத்திரி - 5 கிராம்
மேற்கண்டவைகளை நன்கு காயவைத்து சூரணம் (பொடித்து தூள்) செய்து கொள்ள வேண்டும்.
- பசுநெய் - 75 கிராம்
- சர்க்கரை - 200 கிராம்
- பன்னீர் - 100 மில்லி
சுத்தமான பன்னீரில் சர்க்கரையைக் கரைத்து பாகாக்கி, சூரணத்தைக் கொட்டி கிளறி. நெய் சேர்த்து இறக்கவும்.
சாப்பிட வேண்டிய அளவு
காலை, மாலை 10 கிராம் அளவில் சாப்பிட, மூளையைப் பலப்படுத்தும் அத்துடன் தாது விருத்தியும் உண்டாகும்.
மூளையை பலப்படுத்தும் மேலும் சில மருந்துகள்
மேலும் மூளையைப் பலப்படுத்த, வல்லாரை மாத்திரை, தூதுவளை லேகியம், சங்கு புஷ்பம், அமுக்கரா சூரணம், வாளுளுவை அரிசி சூரணம், கஸ்தூரி மாத்திரை, லிங்கச் செந்தூரம், ஸாரஸ்வதா அரிஷ்டம் போன்ற மருந்துகள் மூளையைப் பலப்படுத்தவும், இரத்த விருத்தி உண்டு பண்ணவும் மிகச் சிறந்த சித்த மருத்துவ மருந்துகளாகும்.
இவைகளை சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்பு அடைந்து, அதிக நினைவுத் திறன் கிடைக்கும். வயதானவர்கள் கூட அதிக ஞாபக சக்தியுடன் இருக்க முடியும். இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து செய்வதால் இதற்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லை.
Post a Comment
Post a Comment