இந்த ஒரு கீரை போதும்..! மலச்சிக்கல், ஞாபக சக்தி அதிகரிக்க, குடல் பூச்சிகளை பூண்டோடு அழிக்க !!!

மலச்சிக்கல் பல சிக்கல் என்று வேடிக்கையாக சொல்வார்கள். ஆனால் அதுதான் உண்மை. உடலில் மலச்சிக்கல் ஏற்பட்டால் உடல் உறுப்புகள் அனைத்துமே கெட்டு, உடலில் புது புதி வியாதிகள் உருவாகும். குடல் சுத்தமாக இருந்தால் உடல் சுத்தமாக இருக்கும். அதுதான் மருத்துவ உலகம் அடிக்கடி கூறும் உண்மை. இப்படியிருக்க, மலச்சிக்கல், குடல் புழுவை நீக்க இந்த மூலிகை அதிகம் பயன்படுகிறது. அது மட்டுமல்ல... நினைவுத்திறனை அதிகரிக்கவும் இது உதவி புரிகிறது. அது என்ன கீரை, அதை எப்படி பயன்படுத்தினால் மேற் சொன்ன பிரச்னைகள் தீரும் என்பதை அறிந்துகொள்வோம். 


மணலிக்கீரை:

மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.

மலச்சிக்கல் குணமாக:

மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

ஞாபக சக்தி பெருக:

ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.

malachikkal kudalpulu


குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய:

மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு  நன்கு அரைத்து அதில் 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்புசளி வயிற்றுப்புண் குணமாகும்.

மூளை நரம்புகள் பலம்பெற:

மணலிக்‌கீரை வதக்கி சாப்பிட்டால்  மூளை நரம்புகள் பலப்படும்.

ஈரல் பலம்பெற:

மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.

இத்தகைய மருத்துவக்குணங்களை வாய்ந்த மணலிக்கீரையை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம்.

Post a Comment

0 Comments