நீண்ட நாள் மலச்சிக்கல் ஒரே நாளில் தீர இப்படி ஒரு லேகியம் இருக்கு தெரியுமா? சாப்பிட்டு பாருங்க.. பூ மாதிரி போகும்...!!!

Post a Comment

மலச்சிக்கல், மலக்கட்டு குணமாக சித்த மருத்துவம்

மலச்சிக்கல், பல சிக்கல். ஏனென்றால் உடலில் சேரும் கழிவுகளால்தான், உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு, நோயாக உருவெடுக்கிறது. இதனால் தான் மூத்த மூலிகை வைத்தியர் மற்றும் சித்தர்கள் குடல் சுத்தம் உடல் சுத்தம் என்றனர். 


மலச்சிக்கல் என்றால் என்ன

இயல்பாக மலம் வெளியேறாமல், மலம் இறுகி, மலம் கழிப்பதில் சிரமம், மலம் முழுவதுமாகப் போகவில்லை என்கிற உணர்வு, மலம் வெளியேறாமல் ஆசனவாயை அடைப்பது போன்ற நிலைமைகளை மலச்சிக்கல் என்று அழைக்கிறோம். சராசரியாக ஒருவர் வாரம் 4 முறைக்கு குறைவாக மலம் கழிப்பது மலச்சிக்கல் ஆகும்.

mala sikkal legiyam

மலச்சிக்கல் லேகியம் செய்ய தேவையானவை


 1. திரிபலாச்சூரணம் 200 கிராம்
 2. நீலாவரைச் சமுலம் சூரணம் 200 கிராம்
 3. சீரகம் 200 கிராம்
 4. கசகசா 200 கிராம்
 5. இசப்பக்கோல் 200 கிராம்
 6. சுக்கு  50  கிராம்
 7. மிளகு  50  கிராம்
 8. வாய்விடங்கம்  50  கிராம்
 9. பசும் நெய் 500 கிராம்
 10. தேன் 250 கிராம்
 11. பனங் கருப்பட்டி 1 கிலோ

லேகியம் செய்முறை

ஒரு கிலோ பனங் கருப்பட்டியை நீரில் கரைத்து வடி கட்டி பாகு காய்ச்சி மேற்படி திரிபலா, நீலாவரைச் சூரணத்தை கொட்டி கிளறி  பசும் நெய் விட்டு கிளறி இறக்கி ஆறிய பின்  தேன் விட்டு கிளறி பாட்டலில் அடைத்து பத்திர படுத்தவும்,

மலச்சிக்கல் லேகியம் உட்கொள்ள வேண்டிய அளவு

 இரவு உணவுக்கு பின் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்கவும்.

மலச்சிக்கல் லேகியம் பயன்கள்

இந்த மலச்சிக்கல் லேகியம் மலம் சார்ந்த நோய்கள் இன்றி மேலும் சில நோய்களையும் கண்டித்து வராமல் தடுக்கும். மலச்சிக்கல், மலக்கட்டு நீங்க, மூத்திர சூடு, மூத்தீர எரிச்சல், வெள்ளைபடுதல்,  குருதியை சுத்தபடுத்துதல் போன்ற பலன்களையும் தருகிறது.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter