நோய் எதிர்ப்பு சக்தி பெற, புற்று நோயை தடுக்க, கண் பார்வையை பலப்படுத்த இந்த ஒரு பழம் போதுமே ! சாப்பிட்டுப் பாருங்க உடனடி பலன் கிடைக்கும் !!!

Post a Comment
இது நமக்கு நல்லா தெரிந்த பழம் தாங்க. ஆனால் இதில் இருக்கும் நன்மைகள் என்னென்னநமக்கு முழுமையா தெரியாம இருக்கு. சாதாரண மனிதர்கள் கூட விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் அத்தனை மகத்துவங்கள் அடங்கியுள்ளன. மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன... !

முக்கனிகளுள் ஒன்றான பலாப்பழம் பல மருத்துவகுணங்கள் கொண்டவை. பலாப்பழத்தை தினமும் சப்பிட்டு வந்தால், கண் பார்வையை சரிசெய்து, புற்று நோய், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவை வராமல் பாதுகாக்கும்.

பலாப்பழம் தினமும் சப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

புரதச்சத்து நிறைந்தது:


பலாப்பழத்தில் புரதச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டு வாருங்கள். மேலும் இது பருப்பு வகைகளுக்கு சிறந்த மாற்றாக விளங்கும். இதனால் பருப்புக்களின் மூலம் ஏற்படும் வாய்வுத் தொல்லையைத் தவிர்க்கலாம்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:


            பலாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்வதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் காய்ச்சல், சளி போன்றவை தாக்காமல் தடுக்கலாம்.

மலச்சிக்கலை போக்கும்:


          பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, முகம் பொலிவோடு இருக்கும். மேலும் இதில் உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.


noi ethirpu sakthi pera


புற்றுநோயைத் தடுக்கும்:


              பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், பைட்டோ நியூட்ரியன்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டு ஆகிய அமில சத்துக்கள் உள்ளன. இவை புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும்.

இரத்த அழுத்தத்தை குறைக்கும்:


            பலாப்பழத்தில் பொட்டாசிய சத்து அதிகம் இருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரிக்கும். இதனால் உடலில் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.


கண் பார்வையை மேம்படுத்தும்:


      பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அவை பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுப்பதோடு, கண்களில் புரை ஏற்படுவதையும் தடுக்கும். முக்கியமாக பலாப்பழத்தில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம் உள்ளது.


ஆஸ்துமாவை குணமாக்கும்:


                   ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள், பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். மேலும், இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், மாலைக்கண் நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter