வெயில் காலத்தில் ஏற்படும் நீர் சத்து பற்றா குறையை போக்க இப்படி செய்யுங்க !

Post a Comment
உடலில் நீர் சத்து குறைபாட்டால் பல்வேறு வெப்ப நோய்கள் உடலில் தோன்றுகின்றன. அதை போக்கி ஆரோக்கியமான உடல் அமைப்பப் பெற வேண்டுமானால் இப்படி செய்யுங்கள். அதிகமான நீராகாரம், பானங்கள் குடிக்கவும். இயற்கை பானங்கள் சிறந்தது. இளநீர், பழ ரசம் மற்றும் மோர் ஆகிவ்வை உகந்தது. மதிய நேரத்தில் மோர் சாதம் கரைத்து, ஒரு லிட்டர் அளவிற்கு குடிக்கவும்.

வேறு எதுவும் தேவையில்லை. பழங்கள் உண்ணுங்கள். குறிப்பாக வாழைப்பழம் நல்ல மளமிளக்கியாக செயல்படும். உடற்சூட்டால் தான் உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

veyil kalathil erpadum neer patrakurai

உடல் வெக்கையை தணிக்க இருவேளை குளிக்கவும். வாரமிருமுறை நல்லெண்ணை தேய்த்துக் குளித்து வருது உடலுக்கு நல்லது.

அதிகமான நீரை உடலுக்கு எந்த ஒரு வடிவத்திலும் செலுத்தலாம். வெறும் தண்ணீரை மட்டுமே குடிப்பது என்பது சிரம மாக இருக்கும். ஆனால் அதையே நீராகரமாகவோ, பழச்சாறாகவோ அல்லது ஏதேமும் திரவ வடிவிலோ உண்பதன் மூலம் உடலுக்குத் தேவையான நீர் சத்து கிடைப்பதோடு, உடல் அதிகமான சக்தியைப் பெற்று வலுவுடன் இருக்கும். சோர்வு நீங்கும்.

இதையெல்லாம் நீங்கள் செய்வீர்களா? செய்தவர்களுக்கு வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைகள் உடனடியாக தீரும். நல்ல ஆரோக்கியமான மனநிலை கிடைக்கும். உடலும் தன் இயல்பிற்கு வந்து சமச்சீராக இயங்கும்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter