கோழி விட்டது முட்டையாம்.. கரு நிறம் பச்சையாம்.. அடேய்.. என்னடா கலர் கலரா ரீல் வீடறீங்க !!!

Post a Comment
கேரளாவில் ஒரு கோழி இட்ட முட்டையை உடைத்துப் பார்த்த போது அது பச்சை நிறத்தில் இருந்த்தால் அந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கேரலாளவின் ஆழப்புலா வைச் சேர்ந்தவர் ஆம்னிகுட்டன். இவர் கடந்த இரண்டு தலைமுறைகளாக விவசாய வேலைகள் செய்து வருவர். தனது பண்ணையில் வளரும் ஒரு இந்திய நாட்டு ரக கோழி ஒன்று நேற்று முட்டையிட்டது. வழக்கமாக கடைசி தருணங்களில் விடும் முட்டைகளை எடுத்து வறுத்து, ஆம்லெட் சாப்பிடுவது அவர் வழக்கம்.

அதுபோலதான் அன்றும் கோழியின் முட்டையிடும் பருவம் இறுதியாகியதால் அந்த முட்டையை எடுத்து சமைத்து சாப்பிட கொண்டு சென்றார்.

அவரது சமையல் அறையில் முட்டை உடைத்துப் பார்த்தபோது அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தத்து. அது பச்சை நிறத்தில் காணப்பட்டது.



உடனே அவர் இதற்கு முன்பு எப்பொழுது இப்படி பார்த்ததில்லை இது அதிசயமாக இருக்கிறது என நினைத்து அதை போட்டோ, மற்றும் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

அதைப் பார்த்த மக்கள், புத்தம் புதியதாக , அதிர்ச்சி தரக்கூடியதாக பார்ப்பதற்கு அதிசயமாக உள்ளதால் அந்த படத்தை ஷேர் செய்து வைரல் ஆக்கினர். அப்படி வைரல் ஆகிய படத்தில் சிலர் வழக்கம் போல இது போட்டோ ஷாப், Graphic செய்யப்பட்ட வீடியோ என்று பலவாறு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter