முடி கொட்ட காரணம் என்ன
முடி உதிர்வு ஆண்களுக்கு மட்டுமல்ல.. பெண்களுக்கும் ஒரு பெரிய பிரச்னைதான். காரணம் ஆண்களுக்கு தலையில் சொட்டை , வழுக்கை ஏற்பட்டு பார்ப்பதற்கு அசிங்கமாக தெரியும். பெண்களுக்கு அதிக முடியிழப்பால் முடி புழக்கமாகி சடை பின்னல் மற்றும் கொண்டை போடுவது அளவில் சிறிதாக பார்ப்பதற்கு அசிங்கமாக தோற்றமளிக்கும்.
பெண்களுக்கு முடி தான் அழகு. அதிக அடர்த்தியான தலை முடி இருக்கும் பெண்கள் அதிக அழகாக காட்சி யளிப்பார்கள். அதனால் தான் நம் முன்னோர்கள் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா இல்லையா? என்பது போன்ற வாதங்களை நடத்தியுள்ளனர். இயற்கையிலேயே பெண்களுக்கு அதிக நீளமான முடி வளரும் என்றாலும், இன்றைய காலகட்டதில் பயன்படுத்தும் சோப்பு, சேம்பு மற்றும் வேலை, இருக்கும் சூழல் போன்ற இன்னபிற காரணங்களால் அதிக முடி உதிர்ந்து, வறட்சி ஏற்பட்டு, ஒரு பாலை வனத்தில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தி விடும்.
அதிகமான முடி உதிர்வு பிரச்னையில் சிக்கி பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். முடி தானே என்று விட்டு விட முடியுமா? சக தோழிகள் மற்றும் இல்லதரசிகளின் கிண்டலுக்கு ஆளாக நேரிடும். கணவன் மார்களின் ரசிப்புத் திறன் குறைந்து விடும். அழகு போய்விடும் என பல பிரச்னைகள் உள்ளது.
சரி, முடி உதிர்வுகு என்ன காரணம்? என்ன செய்தால் முடிவுதிர்வு பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
முடி உதிர்வு - காரணம்
மூலசூடு சரியான முறையில் இல்லாமல் இருந்தால் உடல் வெப்பம் நிலைமாற்றம் ஆவதல் நீர் தலையில் தங்கி மீறினால் பொடுகு ஆகி முடி உதிர ஆரம்பித்துவிடும்.
வேலை பளு என உடலை வருத்தாமல் மூளையை ஓய்வு இன்றி நிலைமாற்றம் அடைய செய்தால் முடி உதிர ஆரம்பித்துவிடும்
இரவு நேரம் துயில் கொள்ளவேண்டும் என்ற நேரத்தில் விழித்து கொண்டு உழைக்கும் நேரத்தில் துயில் கொள்வது முடிஉதிர்தல் தன்னை ஏற்படுத்தி விடும்
காலம் சார்ந்த உணவு பதார்த்தங்கள் காலம் மாறி மாறி உண்டால் நிலைமாற்றம் ஏற்படும் இதனால் முடி உதிர்தல் ஆரம்பித்து விடும்
இப்படி பல்வேறு பட்ட காரணம் உண்டு இன்னும் பரம்பரை காரணி இதில் மேலும் ஒரு பங்கு.
சில ஆட்கொல்லி நோய் தாக்கத்திற்க்கு ஆட்படும் போதும் முடி உதிர்வு அதிகளவு உண்டாகும்.
ஆகையால் முடி உதிர்தலை கண்டு அதன் காரணம் அறிந்து மருத்துவம் செய்ய வெற்றி கிடைக்கும்.
Post a Comment
Post a Comment