வயது ஆக ஆக, பலருக்கும் இருக்கும் ஒரு கவலை இளமை தோற்றம் மறைந்து முதுமை தோற்றம் வருகிறதே என்ற ஒன்று தான். இது இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்பது போன்ற எண்ணம் அவர்களுக்கு வரும். அதனால் தான் இளமை முக்கியம் என்பது போல அதை தக்க வைக்க பலரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் நடிகைகள் அப்படித்தான் தங்களது அழகை, இளமையை பராமரிக்க என குறிப்பிட்ட அளவுக்கு செலவு செய்ய தங்களது வருமானத்தை ஒதுக்கி விடுவர்.
பெண்களுக்கு இளமையை தக்க வைத்துக் கொள்வதில் அதிக விருப்பமுண்டு. ஏனென்றால் ஆண்களை விட பெண்கள் தான் வெகு விரைவில் மூப்பு தோற்றத்தை அடைகின்றனர். அவர்களுக்கு போது உடற்பயிற்சி மற்றும் மகப்பேறு பிரச்னைகள், உடல் ரீதியா ன தொந்தரவுகள் அதிகம் இருப்பதால் சரிவர அழகை பராமரிக்க முடியாமல் விரைவில் முதுமை தோற்றத்தை அடைகின்றனர். சரி, என்ன செய்தால் இளமை தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ளலாம்? எந்தெந்த மூலிகைகள் நமக்கு உதவுகிறது என்று அறிந்து கொள்வோம்.
முதுமையில் இளமை தரும் சஞ்சீவினி சூரணம்
இளமையாக இருப்பவர்கள் இம் மூலிகைகளை சேகரித்து தொடர்ந்து சாப்பிட்டு வர முதுமை நெருங்கவிட்டாம என்றும் இளமையாகவே இருக்கலாம், வயதானவர்களுக்கு இளமையை திரும்ப தரும் சித்த மருத்துவ முறை. ஆண், பெண் இருவரும் சாப்பிடலாம் நோய் நொடிகள் இன்றி இன்புற்று வாழ வழி செய்யும்.சஞ்சீவினி சூரணம் தேவையான மூலிகை
- பூசணி விதை. - 50 கிராம்
- சாலாமிசிரி - 50 கிராம்
- சாரப்பருப்பு -. 50 கிராம்
- முந்திரிப் பருப்பு -. 50 கிராம்
- பாதாம் பருப்பு. -. 50 கிராம்
- பிஸ்தா பருப்பு. -. 50 கிராம்
- அக்ரூட் பருப்பு -. 50 கிராம்
- வெள்ளரி விதை -. 50 கிராம்
- கருப்பு உளுந்து -. 50 கிராம்
- எள்ளு. - 50 கிராம்
- பார்லி - 50 கிராம்
- ஜவ்வரிசி - 50 கிராம்
- கொண்டைக்கடலை - 250 கிராம்
Post a Comment
Post a Comment