நாட் பட்ட அல்சர் குணமாக 40 நாட்கள் இதை எடுத்துக்கோங்க... அல்சர் தொல்லை அறவே விடுபடும் !!! 100% குணம் தெரியும்..!!

நிறைய மாத்திரை எல்லாம் வேணாம். அது உடல் சூட்டை கிளப்பி விடும். மணத்தக்காளி மாமருந்து. மணத்தக்காளி இலைகளை ஒரு கைப்பிடி அளவு பறித்து, அதை நன்றாக நீரில் அலசி, வாய் நிறையப் போட்டு நன்றாக மென்று அந்த சாற்றினை விழுங்கவும். சாற்றினை புண்ணின் மீது படும்படி செய்யவும். இப்படி நாளொன்றிற்று மூன்று வேலை செய்தால், மூன்று நாட்களில் குணம் தெரியும். ஆங்கில மருந்துகளில் உடனடி தீர்வு தரக்கூடியது ஏதும் இல்லை. வலி இல்லாமல் செய்வதற்கான வலி நிவாரணி மாத்திரைகள் உண்டு. அவற்றை உண்பதால் சிறிது நேரம் மட்டும் வலி இல்லாமல் இருக்கும். பிறகு மீண்டும் பழையபடி வலி ஏற்படும். அதிகமான கார உணவுகள், புளிப்பு உணவுகளை தவிர்க்கவும்.

வயிற்றில் புண் இருப்பதால் தான் வாயில் கொப்புளம் ஆக அறி குறி காட்டும். எனவே உங்களுக்கு "அல்சர்" பிரச்னை இருந்தால் அதற்கு இயற்கை மருத்துவம் உண்டு. அதை எடுத்துக்கொள்ளுங்கள்.

அல்சருக்கு வெறும் வயிற்றில் காலையில் தினமும்  ஒரு ஸ்பூன் அளவு வெந்தயத்தைப் போட்டு மென்று தின்று வந்தால், 40 நாட்களில் அல்சர் இல்லாமல் போகும்.

இதை செய்வதற்கு முன்பு 3 நாட்களுக்கு வெறும் வயிற்றில் பசுந்தயிர் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளலாம். அதன் பிறகு தினமும் 40 நாட்களுக்கு அல்லது 48 நாட்களுக்கு வெந்தயத்தை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவிற்கு மென்று தின்றால் நாட்பட்ட குடல் புண் நீங்கி பூரண குணம் அடையலாம்.

இது எனது அனுபவம். எனக்கு இருந்த பல ஆண்டுகள் முற்றிய அல்சர், எந்த வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை. அதன் பிறகு சித்த வைத்தியர் ஒருவரின் அறிவுரையின் பேரில் இதை எடுத்துக்கொண்டேன்.

ulcer marunthu


முதல் மூன்று வாரத்திலேயே நல்ல மாற்றம் தெரிந்து குணமடைந்தது. இருந்தும் ஒரு மண்டலத்திற்கு (48 நாட்கள்) எடுத்துக்கொண்டதால், இன்னும் முழுமையாக குணமடைந்து, நன்றாக பசி எடுத்தது. சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், வயிறு எரிச்சல் ஏதும் வரவே இல்லை.

இன்றுடன் ஓராண்டு முடிகிறது. எனக்கு எந்த தொந்தரவும் இல்லை. முன்பு போலவே விரும்பிய பதார்த்தங்களை எடுத்துக்கொள்ள முடிந்தது.

அல்சர் தொந்தரவால் ஏற்பட்ட பக்க விளைவுகள் ஏதும் இல்லை. நல்ல உடல்நடத்துடன் இருக்கிறேன்.

நீங்களும் செய்து பாருங்கள். இயற்கை க்கு மீறிய நல்ல வைத்தியம் ஏதும் இல்லை. வருட கணக்கில் கண்டதை தின்று கெடுத்துக்கொண்ட நம் உடலை ஒரீரு நாட்களில் சரி செய்து விடலாம் என்று நினைப்பது அபத்தம். எந்த ஒரு நோய்க்கும் குணமாவதற்கு  குறிப்பிட்ட நாட்கள் எடுத்துக்கொள்ளும். எனவே பொறுமையுடன் இயற்கை மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மருந்து என்பதைவிட, உணவு என்று குறிப்பிடுவது நல்லது.

 உணவே மருந்து. இதனை மறந்து விட வேண்டாம். 

Post a Comment

0 Comments