நோயெதுவுமின்றி வாழனுமா? இப்படி வாழ்ந்து பாருங்கள் ! 100 வயது தாண்டியும் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள் !

Post a Comment
நாம் அனைவரும் உடலில் பிரச்சினைகள் வந்த பிறகு பிரச்சினைக்கான நேரடி நிவாரணிகளை தான் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பிரச்சினைக்கான ஆணிவேரை களைந்தால் நோய் முற்றிலும் குணமடைந்து விடும் என்பதை நாம் சற்றும் நினைத்துப் பார்ப்பதில்லை. முயற்சிப்பதுவும் இல்லை. உடனடி நிவாரணம் என்று ஆங்கில மருந்துகளை உண்டு இன்னும் வியாதியை தீவிரமாக்குகிறோம்.

வியாதிகள் வருவதற்கு இரண்டே காரணம் தான். ஒன்று தவறான உணவு முறை மற்றது முறையற்ற வாழ்க்கை முறை.

இவ்விரண்டுமே வேறு வேறாக தெரிந்தாலும் உடலில் பாதிப்புக்களை விளைவிப்பதில் ஒன்றாகத் தான் தொழில்படுகிறது. இவ்வாறு முறையற்ற நாகரீக வாழ்க்கை முறைமையால் நாமே நம் வாழ்வை சிக்கலாக்கி வருகிறோம்.

நம் வாழ்க்கை முறையின் பாதிப்புக்களை நம் உடலானது வலியில்லாத வகையில் நமக்கு முதலில் உணர்த்தும். அதாவது தலை முடி உதிர்தல், தலை முடி நரைத்தல், உடல் எடை கூடுதல், தோல் வறட்சி, தோல் நோய்கள், வயிறு உப்புசம், வாயு தொல்லை என்று ஆரம்பிக்கும்.


noi ethirpu sakthi unavugal


அப்படியே அதன் அடுத்த கட்டம் கொஞ்சம் வெளிப்படையான வலியை காட்டும். தோல் அழற்சி, கொப்புளங்கள், மூட்டு வலிகள், தசை பிடிப்புக்கள், சிறுநீர் வருத்தங்கள், நீரிழிவு, தலை சுற்றல், கண் பார்வை மங்குதல்,உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம், எலும்பு தேய்மானம் என்றவாறு நம் தவறை அறிவுறுத்தும்.

இதிலும் நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் அதன் அடுத்த பாதிப்பு இன்னும் வீரியமாகும்.

அடிப்படையை மாற்றாமல் எந்த பிரச்சினையையும் மாற்ற முடியாது. வியாதியின் ஆணி வேரை களையுங்கள்.

கடை உணவுகள் துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமாக உண்ண பழக வேண்டும் . அதாவது வயிற்றை ஒரு பவித்திரமான ஒன்றாக பார்க்க வேண்டும். அதில் எந்த குப்பைகளையும் போடுதல் ஆகாது. உள்ளே நாம் எதனை தள்ளுகிறோமோ அதன் பலன் தான் நமக்கு கிடைக்கும். விதைப்பது தரமில்லை என்றால் கிடைப்பதுவும் தரம் குன்றியே இருக்கும்.

உட்காரும் அளவை குறைத்து நாள் முழுதும் சுறுப்பாக இருங்கள். அவசியம் நடை பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை தினமும் செய்யுங்கள்.

healthy life style


இலத்திரேனிய பொருட்களை இரவில் பார்க்காதீர்கள். அதில் உள்ள ஒளிக்கதிர்கள் கண்களை பாதிக்கும் அதே நேரம் கண்ணில் நீர்த்தன்மையை காய வைத்து வறட்சியை உண்டு பண்ணி விடும். இரவில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

தூக்கம் வருகிறதோ இல்லையோ வேளைக்கு உறங்கச் செல்லுங்கள். நாளடைவில் உறக்கம் வந்து விடும்.

arokiya valvirukku


இயற்கையை ஒத்த ஒரு ஒழுக்க விதிகளோடு வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டால் என்றும் சிறப்பாக வாழலாம். அதாவது பறவைகளை கவனியுங்கள். சூரியனோடு சூரியனாக அதன் வாழ்க்கை இருக்கிறது. சூரியன் மறையும் நேரம் அது உறக்கத்திற்கு செல்கிறது. அதிகாலையில் எழுந்து விடுகிறது.
இடையில் விழிப்பதுவுமில்லை...கொறிப்பதுவுமில்லை....!

இதுவே இயற்கை நமக்கு சொல்லும் பாடம்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter