புடலங்காயின் மருத்துவ குணங்கள் | மருத்துவ உலகிற்கே தெரியாத சில உண்மைகள் !

Post a Comment

வாயு மண்டலம் என்றால் என்ன?


வாயு மண்டலம் என்பது சூட்சமம். இந்த வாயு மண்டலத்தினை புரிந்து கொள்வது மிக மிக கடினம். சூட்சமத்தை பார்க்க முடியாது. புரிந்து கொள்ள மட்டுமே முடியும். நம் உடலில் வாயுமண்டலம் என்ற அமைப்பு உள்ளது. நாம் எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? அதாவது தூக்க நேரத்தில் தூங்க வேண்டும். சாப்பிடும் நேரத்தில் சாப்பிட வேண்டும். வேலை நேரத்தில் வேலை செய்ய வேண்டும். இதை ஒருங்கிணைத்து உலகத்தில் உள்ள இயக்கங்களோடு தன்னை பொருத்திக் கொண்டு வாழ வேண்டும். இதை நாம் உயிரியல் கடிகாரம் என்று அழைக்கின்றோம்.


பறவைகள், விலங்குகள் அனைத்தும் இயற்கையோடு ஒட்டி, இணைந்து வாழ்கின்றன. மனிதன் இயற்கையை மீறி வாழ்ந்து கொண்டிருக்கின்றான். நாம் உலகத்தோடு ஒட்டி வாழ்தல் வேண்டும்.

உடலுக்குள் இயங்குவது ஒரே பிராண வாயுவாக இருந்தாலும் அவ்வாயு செய்யும் வேலைகளை வைத்து அதனை பத்து வித பெயர்களில் அழைக்கப்படுகிறது.

1 பிராணன்

2 உதானன்

3 சமானன்

4 அபானன்

5 வியானன்

6 கூர்மன்

7 நாகன்

8 கிரிகரன்

9 தேவ தத்தன்

10 தனஞ்செயன்

இந்த வாயுக்கள் உடலில் பல்வேறு இடங்களில் இருந்து உடலை இயங்கச் செய்கின்றன. கண் அசைவிற்கு கூட இந்த வாயுமண்டலம் தான் காரணம். இந்த வாயுக்கள் இரத்த ஓட்டத்தினையும், நிணநீர் ஓட்டத்தினையும், சுவாச செயற்பாட்டினையும் , உயிர் இயக்கத்தினையும் நடத்துகின்றன.

இந்த வாயு மண்டலம் முழுமையாக மனதோடு தொடர்புடையது. இந்த வாயு மண்டலம் ஒவ்வொரு செல்லிற்கும் ஆதாரமாக விளங்குகின்றது. நாம் இதை “மனோவியல் நிபுணர்” என்றும் அழைக்கலாம். மனம் பாதிக்கப்பட்டு ஒரு விஷயத்தினை மறக்க முடியாமல் மனதிலே தேக்கி வைத்திருந்தால் அது நமது உடலையும், எண்ணத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். மனநிலையில் மிகப் பெரிய தடுமாற்றம் ஏற்படும்.

நம் உடம்பில் வாய்வுகள் சுற்றி இயக்கம் பெற்றுள்ளன. இந்த வாய்வுகள் தான் உடலின் அனைத்து இயக்கங்களுக்கும் ஆதாரமாக விளங்குகின்றன. இந்த வாயுக்களைப்பற்றி மேற்கத்தைய மருத்துவம் ஒரு துளியும் அறிந்திட வாய்பில்லை. இது வாதம் சார்ந்த விஷயம். இது ஒரு செயல், ஒரு பொருள் அல்ல. எனவே இதை புரிந்து கொள்வது கடினம். இதை கண்ணால் காண இயலாது. இது ஒரு சக்தி ஓட்டம். இந்த சக்தியை புரிந்து கொள்ளக்கூடிய அறிவியல் இல்லை.

பத்து பேர் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அதில் சில பேருக்கு மருத்துவப் பரிசோதனையில் எந்த பிரச்சினையும் இல்லை என்று வரும். எல்லா பரிசோதனைகளையும் எடுத்து விட்டோம். நீங்களாகவே உங்களுக்கு பிரச்சினை உள்ளது என்று நினைத்துக் கொள்கிறீர்கள் என்று கூறி விடுவார்கள். ஒருவர் ஒரு பிரச்சினையும் இல்லாமல் ஏதாவது பிரச்சினை என்று கூற முடியுமா? முடிவாக ஏதேனும் மனநல வைத்தியரை பார்க்க சொல்லி அறிவுறுத்துவார்கள். வாயு மண்டலம் வித்தியாசமானது.

அடிப்படையில் வாதம்,பித்தம், கபம் என்று மூன்று நிலைகள் உள்ளன.

வாதம் .. என்பது வாயு சர்ந்த விஷயம்.

பித்தம் .. என்பது இரசாயன மாற்றம்

கபம் .. என்பது பருப்பொருள்

வாதம்

வாதம் என்பது ஒரு பிரிவு. மருத்துவமனையில் இரத்தம், ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை எடுத்து பார்க்கின்றார்கள். வாதம் என்பதை பார்க்க எந்த ஒரு கருவியும் மருத்துவ உலகில் இல்லை. இப்பொழுது இருக்கும் மருத்துவ உலகம் மூன்றில் இரண்டு நபருக்கு மட்டுமே தீர்வு கொடுக்க முயலுகின்றது. மீதி ஒரு பகுதி மக்களுக்கு என்ன காரணம் என்று பதில் சொல்லத் தெரியாது. எனவே இது ஒரு ஊனமுற்ற வைத்திய முறை. இதில் முழுமையான தீர்வு கிடைக்கும் என்றால் கண்டிப்பாக முழுமையான தீர்வு கிடைக்க முடியாது. இறுதியாக ஒரு மனநல மருத்துவரை பார்க்க சொல்லி பரிந்துரைப்பார்கள். வாதம் சார்ந்த இந்த கருத்துக்கள் இந்த மருத்துவ உலகிற்கு என்னவென்றே தெரியாது.

வாத நாடி என்பதை பற்றி ஏதும் தெரியாது. வாதம் என்பது ஒரு சூட்சுமம். இது பார்க்கக்கூடிய ஒரு விஷயமாக இல்லை. சூட்சமம் என்பது புரிந்து கொள்ளக் கூடிய ஒரு விஷயம். இந்த சூட்சமம் தெரிவது தான் மிகப் பெரிய இரகசியம்.


வாயுமண்டலம் எதனால் பாதிப்படைகின்றது?

இந்த சூட்சமத்தை அறிந்தால் மிகப் பெரிய வெற்றி. வாயுமண்டலம் சீராக இயங்கும்பொழுது, உடல் நல்ல நிலையில் இயங்கும். வாயுமண்டலத்தை சமாதானப் படுத்தி சீரான நிலையில் சுகமாக வைத்துக் கொள்வது தான் தூக்கம். தூக்கம் கெட்டுப் போனால் ஒட்டு மொத்த வாயுமண்டலம் கெட்டுப் போகும். தண்ணீர், உணவு இல்லாமல் வாழ்ந்து விடலாம். தூங்காமல் வாழ முடியாது. தூக்கம் என்பது மிக மிக அத்தியாவசியமான ஒரு விஷயம். இந்த தூக்கத்தின் தரம் என்பது நாம் எப்படி தூங்குகின்றோம் என்பதை பொருத்து அமைகின்றது.

ஒரு சர்க்கரை நோயாளி அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் அவரால் நன்றாக உறங்க முடியாது. ஒரு சிலர் சிறு சப்தம் கேட்டால் கூட விழித்துக் கொள்வார்கள். ஒரு சிலர் வெடி சப்தம் கேட்டால் கூட எழுந்திருக்க மாட்டார்கள். இப்பொழுது பெரும்பாலும் தூக்கத்தின் தரம் குறைந்து விட்டது. அது போல் நாம் தூங்கும் போது நாம் பார்த்த, கேட்ட அனைத்தும் தூங்கும்போது பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதனால் தூக்கத்தின் மேன்மையான தன்மை குறைந்து விடுகிறது. எப்படி நாம் உணவு உண்ணும்பொழுது கையை கழுவுகின்றோமோ அதுபோல் தூங்கும்போது மனதினை கழுவிவிட்டு உறங்க செல்ல வேண்டும்.

எவ்வளவு கடினமாக உழைத்தாலும் ஒரு மணி நேரம் தூங்கினாலே உங்கள் உடல் புத்துணர்ச்சி பெறும். ஆனால் மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் இருந்தால் கால தாமதமாகி தான் புத்துணர்ச்சி பெறும். தேவையில்லாத விஷயங்களை மனதில் வைத்துக் கொள்வது தான் இதற்கு முக்கிய காரணம்.


எதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும், எதை மறக்க வேண்டும் என்ற ஒரு நியதி உண்டு. மறக்க வேண்டிய விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள கூடாது. ஞாபகத்தில் வைத்துக் கொள்வதை மறந்து விடக் கூடாது. இந்த இடத்தில் பாதிப்பு ஏற்பட்டால் வாயுமண்டலம் சீர்கெடும். தேவையில்லாத விஷயங்களை ஞாபகத்தில் வைத்திருந்தால் பிரச்சினைகள் ஏற்படும்.

pudalangayin nanmaigal


புடலங்காயின் நன்மைகள்


வாயுமண்டலத்தின் பாதிப்பால், தூக்கமின்மையால் தலைவலி ஏற்படும். அவர்கள் சரியாக தூங்க மாட்டார்கள். இல்லையெனில் தூங்கிக் கொண்டே இருப்பார்கள். தூங்கிக் கொண்டே இருந்தாலும் பிரச்சினை. ஒருவர் ஆரம்பிக்கவே இல்லை. ஒருவர் முடிக்கவே இல்லை. அதாவது தூக்கத்தினால் ஏற்பட்ட தலைவலி அதாவது மனம் சமாதானம் அடையவில்லை. ஏதோ சங்கடம் உள்ளுக்குள்ளே சுற்றிக் கொண்டிருக்கின்றது.

பூகம்பம் என்பது பூமியிலிருந்து வாயு பிளந்து வெளியேறுவது. வாயுவால் எதையும் அசைக்க முடியும், உடைக்க முடியும். வாயு அதனதன் வழியில் ஒழுங்காக செல்ல வேண்டும். வழி மாறினால் பிரச்சினைகள் ஏற்படும். வாயு மண்டலம் பாதிப்படையும் போது நமது கண்களின் மேலுள்ள தசை தோல் வழியாக வெடித்து வெளியேறும். எனவே வாயு மண்டலத்தின் பாதிப்பால் கண்களில் புரை ஏற்பட வாய்ப்புண்டு.

அதே வாயு மண்டலம் வேறு திசை வழியாக மாறி காது வழியாக சென்றால் காது இரைச்சல், சப்தமாக கேட்கும்.

வாயு மண்டலத்தின் பாதிப்பால் உள்நாக்கு நீண்டு வளரும். அதனால் அவர்கள் தொடர்ந்து இறுமிக்கொண்டே இருப்பார்கள். நாக்கில் வெடிப்புகள் ஏற்படும்.

வாயு மண்டல பாதிப்பால் அவர்களால் படுத்து உறங்க முடியாது. இருமல் வரும். உடனே எழுந்து விடுவார்கள். படுப்பதால் மூச்சுத்திணறல் ஏற்படும்.

வாயுமண்டலம் சரியாக இயங்கவில்லை எனில் உண்ட உணவு அப்படியே வாந்தியாக வெளிவரும். அல்லது பேதியாகும்.

இந்த வாயு ஆசனவாய் வழியாக வரும் பொழுது ஆசன வாயில் வெடிப்பு ஏற்படும்.

சிறுநீர் கழிக்கும் போது காரமான நெடி உண்டாகும்.

வாயுமண்டல பாதிப்பால் தோலில் வெடிப்புகள் ஏற்படும். கை கால்களில் வெடிப்பு ஏற்படும்.


இவையனைத்தும் வாயுமண்டலம் சீர் கெட்டுப் போனதின் விளைவுகள்.

குணம் : தியாகம.

வாயு மண்டலத்தின் குணம் தியாகம். தியாகம் என்பது நம்முடைய பொருளையோ, உறவையோ, பதவியையோ, கருத்தையோ அல்லது சௌகரியத்தையோ ஒரு உன்னத நோக்கத்திற்காக அல்லது பிற உயிர் நலனுக்காக அதைப்பற்றி ஒன்றுமே அறியாமல் நினைவிலிருந்து நீக்கும் பண்பாகும். இது ஒரு அசாதாரண குணம். எதை வேண்டுமோ அதை பிடித்துக்கொள்ள வேண்டும். எதை விட வேண்டுமோ அதை விட்டுவிட வேண்டும்.

ஒரு நோயாளி எதற்கும் கட்டுப்பட மாட்டார். முழுக்க முழுக்க மனநிலையால் பாதிக்கப்பட்டிருப்பார். ஒரு விஷயத்தை அவர்களால் மறக்க முடியாது, மன்னிக்கவும் முடியாது. தியாகம் என்பது நடந்த எந்த ஒரு விஷயத்தையும் உள் வாங்காமல் இருப்பது. கடந்த காலத்தை முற்றலுமாக நீக்கிவிட்டு அப்படியே நிகழ் காலத்திற்கு மாறுவது தான் தியாகம். என்ன நடந்தது என்றே தெரியக்கூடாது. இந்த மாதிரியான ஒரு பக்குவம் இருந்தால் வாயு மண்டலத்தில் பிரச்சினை வராது.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.

நன்றியை இறைவனுக்கு காட்டுங்கள். நன்றியில்லாத அனைத்து விஷயங்களையும் அப்பொழுதே மறந்து விடுங்கள். இதை மாற்றி யோசித்தால் வாயுமண்டலம் கெட்டுப் போகும். நாம் அனைவருமே தற்பொழுது மன நோய் வியாதிக்காரர்களாக மாறிக்கொண்டு வருகின்றோம். ஏனெனில் அதிகமான பிரச்சினை, குழப்பங்களில் சிக்கி மன அமைதியில்லாமல் இருக்கின்றோம். இதற்கு மிக சிறந்த தீர்வு புடலங்காய்.

ஞாபகத்திறனை முறையாக செயற்படுத்துவது வாயு மண்டலம். ஒருவரை மன்னிக்கக்கூடிய ஆற்றல் வேண்டும். இதுவே தியாகத்தின் அடையாளம். வாயு மண்டலத்திற்கு உதாரணமாக கடகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நண்டு குட்டிகளை ஈன்ற பிறகு அது இறந்து விடும். தன்னை அழித்துக் கொண்டு குட்டிகளை ஈனுகின்றது. எனவே தியாகத்தின் அடையாளமாக அதை கூறுகின்றோம். ஒரு மனிதனின் உயர்வு எதுவானாலும் அவருடைய தியாகத்தை தான் உயர்வாக கூற முடியும். ஏதோ ஒரு விஷயத்தை, அவருடைய சுகத்தினை இழந்து தான் தியாகம் செய்ய முடியும். தியாகத்தின் மூலம் தான் ஒருவர் உயர்ந்த நிலையினை அடைய முடியும்.

தியாகம் என்பது பலனை திருப்பி எடுக்காத நிலை. தியாகத் தன்மையில்லை எனில் தூக்கம் கெட்டுப் போகும். மனம் கெட்டுப் போனால் என்ன வியாதி வேண்டுமானாலும் வரலாம். இருக்கும் நோய்கள் அதிகமாகலாம். இதற்கு சிகிச்சை அளிக்க முடியாது. சிகிச்சை தோல்வியில் தான் சென்று முடியும். இவர் என்ன நினைக்கின்றார் என்று யாருக்கும் தெரியாது. எனவே மனநிலை பாதித்த ஒருவருக்கு சிறந்த நிவாரணம் அளிப்பது புடலங்காய். புடலங்காய் ஒரு சிறந்த மனநல வைத்தியர். இதன் மூலம் அவரின் மனநிலையை சீர்படுத்தி விடலாம்.

உங்களுக்கு தியாக மனப்பான்மையிருந்தால் அந்த இறைவனிடமிருந்து அஷ்ட சக்திகளும் கிடைக்கும். இந்த அஷ்ட சக்திகளை அஷ்டலட்சுமிகள் என்று அழைக்கின்றோம். ஒரு மனிதனின்

ஐம்புலன்களையும் அடக்கக்கூடிய தன்மை,
தயாராகும் சக்தி,
வளைந்து கொடுக்கும் தன்மை,
சகிப்புத் தன்மை,
பகுத்தறிவு,
தீர்மானித்தல்,
எதிர்கொள்ளுதல்,
ஒத்துழைப்பு


போன்ற எட்டு குணங்களும் நமக்கு கிடைக்கும். இதை நாம் வரலட்சுமி விழாவாக கொண்டாடுகின்றோம். இந்த பூமியில் வாழும் அனைத்து மனித சமுதாயத்திற்குமே வரமாக கிடைக்கக்கூடிய ஒரு விழா. இதற்கு தியாக குணம் வேண்டும். ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும். ஒருவர் எந்தளவிற்கு தியாகம் செய்கிறார்களோ அந்தளவிற்கு வரத்தினை பெற தகுதியானவர்கள்.

நம் வாழ்க்கை நம் கையில். நாம் நம்மை யாரோடும் ஒப்பிட்டு பார்க்க கூடாது. ஏமாற்றம் ஏற்பட இதுவே முக்கிய காரணம். இருக்கின்றதை விட்டு பறக்க ஆசைப்படக் கூடாது. நிகழ்காலத்தில் வாழாத தன்மை, மனம் வேறு எங்கோ ஏக்கத்தில் இருப்பது இது போன்ற நிலையில் இருக்கும் போது, நிறைவேறாத ஆசைகளையுடைய ஆன்மா நம்மை வந்தடையும். அதாவது வாகனம் ஒன்று. ஓட்டுபவர் இரண்டு பேர். இது எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படாது.

எனவே வாயு மண்டலப்பிரச்சினை என்பது சம்பந்தப்பட்டவரே காரணமாக இருக்கலாம். அல்லது ஆன்மா சம்பந்தப்பட்ட பிரச்சினையாகவும் இருக்கலாம்.

உடம்பில் வாயு மண்டலத்தின் செயற்பாடு வேகமாகயிருக்கும். உடம்பின் இயக்கம் அதிகமாக இருக்கும். மனம் தட்டு தடுமாறி போக வாய்ப்புண்டு. ஆடி மாதம் சக்தி அதிகம். பலன் அதிகமாக கிடைக்கும். நல்லது, கெட்டது எது செய்தாலும் பலன் பல மடங்கு பெருகி வரும்.

மனிதன் ஏக்கம் கொள்ளக்கூடாது. மனம் அழுத்தம் கொள்ளக்கூடாது. மனிதன் அடுத்தவர்களை ஒப்பிட்டுப் பார்க்க கூடாது. இதனால் நிம்மதி கெட்டு போகும். பழி வாங்கும் உணர்வு ஏற்படும். மன்னிக்கும் ஆற்றல் கண்டிப்பாக வேண்டும். சகிப்புத் தன்மை வேண்டும்.

மண்டலம் : வாயு மண்டலம்

குணம் : தியாகம்

மாதம் : ஆடி

உடலின் செயல்பாடு : சக்தி.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter