இதயம்-கல்லீரல் – நுரையீரல் மூன்றையும் சுத்தப்படுத்த அருமையான,எளியமருந்து

சில நோய்களை சாதாரணமாக தினமும் நாம் உபயோகப்படுத்தும் சில உணவு பொருட்களைக் கொண்டே குணப்படுத்தலாம்.

பூண்டு, எலுமிச்சைப்பழம், இஞ்சி இவற்றைக்கொண்டு இரத்தத்திலுள்ள கொழுப்பு, இதயதமனி அடைப்பு, தொற்றுநோய் மற்றும் சளி தொல்லைகளிலிருந்து விடுதலை பெறுவது எப்படி என்று பார்ப்போம்
.
ஜெர்மனியில் பிரபலமான இந்த பானம் மூன்று உணவு பொருட்களை கொண்டு தயார் செய்கிறார்கள். இயற்கையான இந்த உணவுபொருட்கள் உடலில் ஏராளமான பலன்களை ஏற்படுத்துகின்றன.

இதய தமனிகளில் அடைப்புகள் ஏற்படாதவாறு தடுக்கின்றது. இரத்தத்தில் கொழுப்பு விகிதத்தை சரியான அளவில் இருக்குமாறு கட்டுப்படுத்துகிறது. தொற்றுநோய்களை அகற்றி சளித்தொல்லை ஏற்படாதவாறு செய்கின்றது.

இதை அருந்தும்போது ஈரலிலிருந்து நச்சு கழிவுகள் வெளியேற்றப்பட்டு சுத்தமாகின்றது.

kalleeral sutham seiyum panam


ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் கூடுதலாக உள்ளதால் நோய்களை ஏற்படுத்தும் ப்ரீ ரேடிக்கல்களை வெளியேற்றி இரத்த ஓட்டத்தை சரிபடுத்தி முதுமை ஏறபடாதவாறும், கேன்சர் நோய்கள் வராதவாறும் காக்கின்றது.

kalleeral sutham


இப்பொழுது தேவையானவை என்னவென்று பார்ப்போம்:


1.முழு பூண்டு – 4
2.தோலுடன் கூடுய எலுமிச்சைப்பழம் – 4
3.இஞ்சி – ஒரு சிறிய துண்டு
4. தண்ணீர் – 2 லிட்டர்

செய்முறை:


  • எலுமிச்சை பழத்தை கழுவி சிறிதாக நறுக்கவும். பூண்டை உரிக்கவும். இஞ்சியின் தோலை அகற்றி சிறிதாக நறுக்கவும். இவை எல்லாவற்றையும் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்தவற்றை வேறு பாத்திரத்தில் மாற்றி அதன் மேல் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றவும்.
  • இதை அடுப்பில் வைத்து சூடாக்கி கொதிக்கும் நிலை வரும் போது அடுப்பை அணைக்கவும். சூடாக்கியதை குளிரவைத்து சல்லடையால் சளித்து கண்ணாடி பாட்டில்களில் நிறைத்துக்கொள்ளவும்.

எவ்வாறு சாப்பிடுவது ?

காலையில் வெறும் வயிற்றில் உணவு சாப்பிடுவதற்க்கு இரண்டு மணிநேரம் முன்பு ஒரு கிளாஸ் குடிக்கவும். ஒவ்வொருமுறையும் குடிப்பதற்க்கு முன் பாட்டிலை நன்றாக குலுக்கி ஒரு கிளாஸில் ஊற்றவும்.

Post a Comment

0 Comments