உங்க குழந்தை எது கொடுத்தாலும் சாப்பிட மாட்டேங்குதா? இந்த வேப்பம்பூ சட்னி ஒருமுறை ட்ரை பண்ணிப் பாருங்களேன் !

Post a Comment

வேப்பம் பூ துவையல் செய்முறை மற்றும் மருத்துவ பயன்

  

வேப்பம் பூ துவையல் செய்ய தேவையானவகைகள்

  1. வேப்பம் பூ     -  50 கிராம்
  2. வெல்லம்.      -  50 கிராம்
  3. மிளகு            -  1 ஸ்பூன்
  4. பூண்டு.          -  3 பல்
  5. உப்பு , புளி ,எண்ணெய் - தேவையான அளவு
  6. பச்சரிசி.      -  10 கிராம்

வேப்பம் பூ துவையல் செய்முறை

முதலில் வேப்பம் பூவை சுத்தப் படுத்தி எண்ணெய்யில் வதக்கிக் கொள்ளவும். பச்சரிசியை வதக்கிய கொள்ளவும். வதக்கிய வேப்பம் பூவுடன் வறுத்த பச்சரிசி , வெல்லம் ,மிளகு ,பூண்டு மற்றும்  உப்பு அனைத்தையும் சேர்த்து துவையலாக அரைத்துக் கொள்ளவும்.

 veppam poo samayal

வேப்பம் பூ துவையல் பயன்கள்

இந்த துவையலை தினமும் காலை வேளை உணவுடன் தெடர்ந்து சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும், கல்லீரலை நன்கு இயக்குவிக்கும், மூல நோய் சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் நீங்கும், குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும்.

குழந்தைகள்

குழந்தைகளுக்கு வாரம் இரண்டு நாட்கள் இந்தத் துவையலை கொடுத்து வந்தால் குடல் புழுக்கள் அழியும். துவையலை தினமும் சாப்பிட்டு வரும்பொழுது பசி உணர்வு அதிகரிக்கும் ,குடல் புண் மற்றும் பித்த சார்ந்த குறைபாடுகளையும்  குணப்படுத்தும்.

Tags: Vr benefits, veppam poo chutney, veppam poo rasam seivathu eppadi, veppam poo in tamil, veppam poo thuvaiyal in tamil, veppam poo maruthuvam, veppam poo payangal, veppam poo samayal, veppam poo benefits tamil.

 

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter