கொரானோ தொற்று ஏற்படாமல் இருக்க உண்ண வேண்டிய உணவுகள் !

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம், அதிகரித்து கொண்டே போகிறது. நோய் தாக்காமல் தடுக்க, கைகளை அடிக்கடி சோப்பு போட்டுநன்கு கழுவுவதும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வதும் மட்டுமே தீர்வு.

'நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, வைட்டமின் அதிகம் உள்ள காய்கறி, பழங்களை தினமும் உணவோடு சேர்த்து கொள்ளலாம்' என்கிறார் உணவியல் நிபுணர் ஜூலியட்ஷீபா.

மேலும் அவர் கூறியதாவது:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதில், காய்கறி, பழங்கள் மற்றும் கீரை வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இன்றைய சூழலில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. சிட்ரஸ் நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை மற்றும் பெர்ரி வகைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

citrus foods to avoid fever


இவற்றை அடிக்கடி உட்கொள்வதன் மூலம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். காலையில் எழுந்ததும் இளநீர், ஜூஸ் அல்லது மோர் குடிக்கலாம். அல்சர் இருப்பவர்கள், எலுமிச்சை போன்ற ஜூஸ்களை தவிர்ப்பது நல்லது.

மதியத்துக்கு, காய்கறி சூப் உகந்தது. கூட்டு, பொரியல், சாம்பார் என இவற்றில் 2 வகை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, கீரை உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அதிலும், பசலை கீரையில் வைட்டமின் சத்து அதிகம் உள்ளது. காபி, டீ, கூல்டிங்ஸ், ஆயிலில் வேகவைத்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

இரவு உணவுக்கு, ராகி, கோதுமை போன்ற சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக, தினமும் 3 லிட்டர் வரை நீர் ஆகாரம் எடுத்தே ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments