அடிக்கடி கை கழுவதால் ஏற்படும் தோல் வறட்சியை நீக்க இப்படி செய்யுங்க ! அனைத்து வயதினரும் கட்டாயம் பின்பற்றவும்..!


இந்த கொள் ளை நோயை தவிர்க்க அடிக்கடி வெளியில் செல்லாமல் இருப்பதும், வீட்டிலேயே அடங்கி கிடப்பதுமாக இருந்து கொண்டிருக்கிறோம். வீட்டில் இருந்தால் மட்டும் போதாது அவ்வப்பொழுது கட்டாயம் கைகளை சானிடைசர் அல்லது சோப்பு போட்டு கழுவ வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கைகளை சோப்பு போட்டு கழுவதால், சில பின்விளைவுகள் ஏற்படச் செய்யும்.

தோல் வறட்சி, தோல் உரிதல், வெட்டுக்காயம் உட்பட சில பிரச்னைகள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது.

வைர ஸ் காலத்தில், வழக்கத்தை விட, அதிக தடவை, கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்; வைரஸ் தொற்றில் இருந்து, நம்மை பாதுகாத்துக் கொள்ள, இதுதான் மிக அவசியம்.

அதே சமயம், அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவதால், கைகளில் வறட்சி ஏற்பட்டு, அரிப்பு, எரிச்சல், தோல் உரிவது, சில சமயங்களில், தோலில் வெட்டுக் காயம் போன்ற ஏற்படுவதாக பலர் சொல்கின்றனர். அதற்காக, கைகளை கழுவுவதை தவிர்க்க கூடாது.

ஒவ்வொரு முறையும் கைகளை கழுவியதும், ஈரத்தை நன்கு துடைத்து தோலில் ஈரப்பதத்தை தரும் ஏதாவது, கிரீம் பயன்படுத்தலாம்.

HAND WASH SIDE EFFECTS


எல்லாவற்றையும் விட சிறந்த தீர்வு, தேங்காய் எண்ணெய். இரவு தூங்க போவதற்கு முன், கைகளில் தேங்காய் எண்ணெய் தடவி, பருத்தி துணியால் ஆன கையுறை அணிந்து கொள்ளலாம். காய்கறி, பழங்களை வெட்டும்போதும், சமையல் செய்யும் நேரத்திலும், இதை பின்பற்றலாம்.

தேங்காய் எண்ணெய்க்கு மாற்றாக, பாதாம் எண்ணெயும் பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணைய் பயன்படுத்து கைகள் மட்டும் அல்லாது, தலை, உடல், கை, கால் என அனைத்து பகுதிகளிலும் பூசிக்கொண்டால் தோல் வறட்சி இல்லாமல் இருக்கும். அதே நேரத்தில் வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுக்கள் தோலை பாதிக்காத வண்ணம் இருக்கும்.

#தேங்காய் எண்ணையெ #கை கழுவுதல் #வைர ஸ் தொற்று #கொள்ளை நோ ய்..

Post a Comment

0 Comments