உங்களை சந்தித்தது கூட கிடையாது ஆனால் எனக்கு பெரிய இழப்பு ! பிரபல நடிகர் மரணத்தால் துக்கமடைந்த சாய்பல்லவி ட்வீட் !

Post a Comment
அம்மா நான்கு நாட்களுக்கு முன்பு இறந்து போக, அவரது இறுதி சடங்குக்கு கூட போக முடியாத நிலைமையில் இருந்த அந்த பிரபல நடிகர், அந்த துக்கம் தாங்காமல் அதிர்ச்சியில் இறந்தே போனார். பிரபல நடிகராக இருந்தும் பெற்ற தாய்க்கு இறுதி காரியம் செய்ய முடியாமல் போன வெளிப்பாடா அது.? இதோ ஒரு துயர சம்பவம்..!

பாலிவுட் நடிகர் இர்பான் கான் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 53. இரண்டு வருடங்கள் முன்பிருந்தே புற்றுநோயுடன் போராடி வந்த அவர் லண்டனில் சிகிச்சை பெற்று சில மாதங்கள் முன்பு தான் இந்தியா திருப்பினார்.

அவருக்கு சில தினங்கள் முன்பு உடல்நிலை மிக மோசம் அடைந்த நிலையில் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மதியம் காலமானார். அவருக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

actress sai pallavi


நடிகை சாய் பல்லவி ட்விட்டரில் இர்பான் கான் பற்றி உருக்கமாக பதிவிட்டுள்ளார். "நான் உங்களை நேரில் சந்தித்தது கூட இல்லை சார். ஆனால் இந்த இழப்பு எனது சொந்த இழப்பாக உணர்கிறேன்.

sai pallavi

உங்கள் நடிப்பு மற்றும் சினிமா மீதான காதல் உங்களை எங்கள் இதயத்திற்கு நெருக்கமானவராக ஆக்கியுள்ளது. உங்கள் ஆன்மா இன்னும் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான இடத்தில் இருக்கட்டும்" என சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

கிட்ட நின்று பார்க்க வில்லை என்றாலும், எட்ட நின்று தூரத்தில் திரையில் பார்த்த அனுபவம் மற்றும் சக சினிமா நடிகர் என்ற இரு வேறு காரணங்களால்தான் நடிகை ட்வீட் இவ்வாறு மனமுடைந்து ட்வீட் செய்துள்ளார் என அவரது ரசிகர்கள் இது பற்றி கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter