ச ட்டி ஒடச்சிப்புட்டு இப்ப பீல் பண்ணி என்னம்ம பிரயோசம் அமலா பால் ! ரசிகர்கள் கி ண் ட ல் !

Post a Comment
சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகை அமலாபால். முதலில் தன்னை விட அதிக வயது வித்தியமுள்ள டைரக்டர் விஜய் திருமணம் செய்து கொண்டார். பெற்றோரை மீறி சினிமா நண்பர்கள் மூலம் அந்த திருமணம் நடந்து. அது ஆறு மாத காலம் கூட நீடிக்கவில்லை. உறவில் விரிசல் ஏற்பட விவாகரத்தில் முடிந்தது. அதற்கு ஒரு பிரபல நடிகர் தான் காரணம் என பெரும்பாலானோர் கிசு கிசு த்தனர்.  அதன் பிறகு அமலா பால் வேறு மாதிரி மாறிவிட்டார்.சமீபகாலமாகவே வாழ்க்கைத் தத்துவங்களாக சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் நடிகை அமலாபால். அதிலும் குறிப்பாக இரண்டாவது திருமணம் பற்றிய சர்ச்சைகளுக்குப் பிறகு ஆண்கள், பெண்கள் மற்றும் காதல் பற்றிய பதிவுகளை அதிகமாக அவரது பக்கத்தில் பார்க்க முடிகிறது.தற்போதும் அதே போன்றதொரு பதிவை அமலாபால் வெளியிட்டுள்ளார். ஓஷோவின் தி புக் ஆப் வுமன் என்ற புத்தகத்தின் புகைப்படத்தோடு, சமூகத்தில் பெண்களின் நிலை பற்றிய தனது ஆதங்கத்தை இந்தப் பதிவில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அதில், 'பெண் அடிமைத்தனத்தை அனுபவித்தாள், அவமானத்தை உணர்ந்தாள், பொருளாதாரத்தில் சார்ந்து வாழ நிர்பந்திக்கப்பட்டாள், எல்லாவற்றிற்கும் மேலாக, தொடர்ச்சியாக கர்ப்பம் தரிக்கப்பட்டாள். ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும், கிட்டத்தட்ட ஒரு பெண்ணின் மரணம் தான். அந்த மரண பயம் தீருவதற்கு முன்பே மீண்டும் அவளை கர்ப்பமாக்கத் கணவன் தயாராக இருக்கிறான்.மனிதர்களை உற்பத்தி செய்வதற்கான ஒரு தொழிற்கூடமாக பெண்ணின் உடல் அமைந்துவிட்டது என்றே தெரிகிறது. ஆண்கள் பெண்ணின் வலியில் பங்கேற்பதில்லை. ஆணின் காமத்திற்கும், பாலுணர்வுக்கும் பெண் ஒரு பொருளாக்கப்பட்டாள். அதன் விளைவு குறித்து யோசிக்க ஆண் சிறிதும் கவலைப்படவில்லை.'நான் உன்னை காதலிக்கிறேன்' என்று சொல்லும் ஒரு ஆண் உண்மையில் அவளை நேசித்திருந்தால், உலகில் ஏன் இவ்வளவு மக்கள் தொகை? இங்கு 'காதல்' என்ற வார்த்தை அர்த்தமற்று உள்ளது. கிட்டத்தட்ட கால்நடைகளைப் போலவே பெண் நடத்தப்படுகிறாள்” என அமலாபால் வேதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டதை சிலர் அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து சட்டிய ஒடச்சிப்புட்டு இப்ப பீல் பண்ணி என்னம்மா பிரயோசம் என கலாய்த்து வருகின்றனர்.

Tags: amala paul, actress , instagram, thathuvam, feelings.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter