கூரை வீட்டுன்னாலும், கோடீஸ்வர நேர்த்தி (வீடியோ உள்ளே)

Post a Comment
ஒருவர் வசிக்கும் வீடு மழைக்கும், வெயிலுக்கும் மறைவு தரக்கூடிய இடம் மட்டுமல்ல.

அவருடைய முன்னேற்றத்திலும், அவருடைய வாழ்க்கை வெற்றியிலும் கூட அந்த வீடு முக்கியப் பங்கு வகிக்கின்றது எனலாம். காரணம், அமைதி நிறைந்து நிற்கும் சுற்றுப்புறம் தான், நம்மை நிம்மதியாக யோசிக்க வைக்கும். கவலைகளை மறக்க வைக்கும். அடுத்த கட்டத்திற்கு நகர வைக்கும்.

'எனக்கு மட்டும் ஒரு நல்ல வீடு இருந்திருந்தா, நான் எப்படி எல்லாம் இருந்திருப்பேன்' என்று பலரும் கூறக் கேட்டிருப்போம். இங்கு தன்னை மறந்து வேலை செய்யும் பலரது கனவுகளிலும் முக்கியமானதும் 'நல்ல வீடு கட்ட வேண்டும்' என்பது தான்.

tiktok veedu


அவ்வாறு கட்டிய தனது குடிசை வீட்டின் சுற்றுப்புத்தையும், அதன் உட்புற அமைப்பையும் ஒருவர் வீடியோ எடுத்து டிக் டாக்கில் பதிவிட்டுள்ளார். தனது சக்திக்கு உட்பட்டு அவர் கட்டி வைத்திருக்கும் ஓலை வீடு காண்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

வீட்டின் சுற்றுப்புறம் முழுவதும் அழகாக சுத்தம் செய்யப்பட்டு செடிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. வாசலுக்கு வெளியே ஒரு மண்பானையில் குடிக்க தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.

உள்ளே நுழைந்ததும் அங்கு டிவி வைத்திருக்கும் மேசை, பழைய கண்ணாடி பாட்டில்களால் செய்யப்பட அலங்காரப் பொருட்கள் வைத்து அழகு படுத்தப் பட்டுள்ளது. சிறிய சமையல் அறை சுத்தமாகப் பராமரிக்கப் பட்டு வருகிறது.@szubeee എന്റെ കിളിക്കൂടിന്റെ ഫുൾ വീഡിയോ വേണമെന്ന് ഒരുപാടുപേർ പറഞ്ഞു.... അവർക്കായി..
♬ Peeli Kannezhuthi - G. Venugopal & Chithra
ஒரு படுக்கை அறை, சமையல் கட்டு, வரவேற்பறை என மூன்றே அறைகள் மட்டும் கொண்ட அந்த சிறிய வீடு பராமரிக்கப் பட்டுவரும் விதம் டிக் டாக் பயனாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

பலராலும் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ, ஏராளமான லைக்குகளையும் பெற்றுள்ளது. நினைத்தது கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்ததை நிறைவாகப் பயன்படுத்த வேண்டும் என்று இந்த வீடியோ உணர்த்துகிறது.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter