இதில் ஏதாவது ஒன்னை கலந்து வெறும் வயிற்றில் குடித்துப் பாருங்க ! அப்புறம் உங்களுக்கு எந்த ஒரு நோய் நொடியும் உருவாகாது...!!!

Post a Comment
ஒரு செடி நடுவதென்றால், நல்ல விதை தேர்ந்தெடுக்க வேண்டும். அதை சரியான இடத்தில் பதியன் போட்டு, முளைக்க வைக்க வேண்டும். உரம் போட்டு வளர்க்க வேண்டும். தேவையான சூரிய ஒளி கிடைக்க வேண்டும். ஆடு, மாடு , பிற வற்றிடமிருந்து அதை பாதுகாத்திட வேலி அமைத்திட வேண்டும். அது போலதான்... உடலும்.. நல்ல உடல் நிலை அமைய வேண்டுமானால், சரியான போதுமான உணவு மற்றும் உறைவிடம், இயற்கை சூழல் அமைய வேண்டும்.


ஒரு நல்ல நாளின் தொடக்கம் எப்பொழுதும் எப்படி அமைய வேண்டும் என்பது நம் கையில் தான் உள்ளது. நல்ல சிந்தனையுடன் ஆரம்பித்தால் அது நன்றாகவே முடியும்.  அந்நாளை நாம் ஆரம்பிக்கும் விதத்தில் தான் உள்ளது. அதேபோல் தான் உடலின் ஆரோக்கியம் என்பது அன்றைய நாளில் நாம் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொருத்து அமையும்.

oma kudi neer


பொதுவாக காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடிப்பது நல்லது. இதனால் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேற்றி உடலை சுத்தம் ஆகும். அப்படி வெறும் தண்ணீர் குடிப்பது மட்டுமில்லாமல், அதனுடன் சில பொருட்களை சேர்த்து குடித்தால் இன்னும் ஏராள நன்மைகள் கிடைக்கும். அப்படி என்னென்ன பொருட்கள் நீரில் கலந்து குடிக்கலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

ஓமம் கலந்த நீர்
ஒரு டீஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, இரவு முழுவதும் ஓற வைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

oma kudi neer


இதை குடிப்பதால் உடலில் உள்ள செரிமான பிரச்சனைகள் சரி செய்யக்கூடியது. மேலும், மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய வலியை போக்கும்.
சீரகம் கலந்த நீர்
ஒரு டம்ளர் நீரில் சீரகத்தை போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் எழுந்து அந்த நீரை வடிகட்டி குடிக்க வேண்டும்.

இந்த நீர் அனைவருக்கும் மிக நல்லது. ஏனென்றால், இது குடிப்பதால் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது.
கொத்தமல்லி விதை கலந்த நீர்
ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த மிகவும் உதவும்.
அருகம்புல் தண்ணீர்
ஒரு டீஸ்பூன் அருகம்புல் பொடியை நீரில் கலந்தோ அல்லது ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸோ வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதை குடிப்பதால் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேற்றி, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்.
உருளைக்கிழங்கு நீர்
சில உருளைக்கிழங்கு துண்டுகளை ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க, உடலில் ஆற்றல் அதிகரிக்கும்.


இப்படி மேற்குறிப்பிட்ட பொருட்களை எல்லாம் கலந்து குடித்துப் பாருங்க. நிச்சயம் உங்கள் உடலுக்கு நல்ல நன்மை கிடைக்கும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter