தல அஜீத் அன்பு வேண்டுகோள்..! கொ ரோனா பரவும் இந்த நேரத்தில் இப்படி செய்யாதீங்க...

Post a Comment
தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரம் தல அஜீத. அவர் ரசிகர் மன்றத்தை கலைத்திருந்தாலும், அவரது ரசிகர்கள் அவரை கொண்டாடுவதை மறப்பதில்லை. ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஏதாவது சமூக சேவை செய்து, அவரது பெயரில் நற்பணி செய்து கொண்டிருப்பர். சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் அவரது பெயர் அன்று ட்ரெண்டிங் ஆக இருக்கும். குறிப்பாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களுக்கென ஒரு பொதுவான DP உருவாக்கி, பிறந்தநாழ் வாழ்த்தை தெரிவிக்க ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டும் அஜீத்தின் பிறந்த நாளை முன்னிட்டு பொது டிபி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த டிபியை பிரபல சினிமா நடிகர்கள் வெளியிடுவதாக இருந்தது. குறிப்பாக அருண் விஜய், ஹன்சிகா, ஆதவ், பிரியா ஆனந்த், தமன் ஆகியோர் கொண்ட குழு வெளியிடுவதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது.

இந்த நிலையில் கொரானா போன்ற உயிராபத்து நோய் பரவும் இந்த நேரத்தில் இதுபோல செய்ய வேண்டாம் என அஜீத் கேட்டுக்கொண்டுள்ளார். இது விஷயமாக நடிகர் ஆதவ் அவர்கள் அஜீத் எனக்கு போன் செய்தார். ரசிகர்களே , நண்பர்களே.. கொரானோ பரவும் இந்த காலத்தில் எனக்கு தனி டிபி உருவாக்குவதோ, அதை வெளியிட்டு ட்ரெண்ட் பண்ணுவதோ வேண்டாம் என தெரிவித்தார். எந்த வித பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் ஈடு பட வேண்டும் என கூறினார் என்றார்.ஆரவ் விடம் மட்டும் இதை கூற காரணம், அவரும் அதை வெளியிடும் பட்டியலில் இடம் பெற்றிருப்பதால் தான் என்கின்றனர். பொதுவாகவே பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அஜீத்திற்கு பிடிக்காது. இந்த சூழ்நிலையில் இதுபோன்ற வித்தியாசமான கொண்டாட்டங்கள் எதுவும் தேவையில்லை என உறுதியாக கூறிவிட்டார்.  தல எப்பவும் தல தான். மக்கள் உயிருக்கு பயந்து வீட்டில் அடங்கி கிடக்கும் இந்த நேரத்தில் சரியான முடிவு எடுத்து, அதை மக்களுக்கு சென்று சேர் சரியான நபரை தேர்ந்தெடுத்து கூறியிருக்கிறார்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter