கொரோனோ மருந்து கண்டுபிடித்து ஹாலந்து விஞ்ஞானிகள் சாதனை ! இனி எல்லாம் சுகமே..!

உலகையே ஒரு இடத்தில் அசையாமல் இருக்கச் செய்து விட்டது கொரோனா. வீரியமான தனது போக்கில் மனிதர்களை ஈவு இரக்க மற்று பலி கொண்டு தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியா உட்பட வளரும் நாடுகள், அமெரிக்கா, இத்தாலி, சீனா, போன்ற வளர்ந்த நாடுகளையும் கூட விட்டு வைக்கவில்லை.


நாளிதழ், தொலைக்காட்சி என எங்கு பார்த்தாலும் கொரானா குறித்த செய்திகள். இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில் சிகிச்சை முறையில் அவ்வப்பொழுது அதனை ஒத்த வைரஸ்க்கு செய்யப்படும் மருந்து மாத்திரைகளே பயன்படுத்தபடுகின்றன. இந்நிலையில் கொரானவிற்கு மருந்து கண்டு பிடித்திருப்பதாக நம்பகத் தகுந்த தகவல்கள் வெளியாகி உலக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

corono virus remedy


கொரானோவுக்கு மருந்து


ஹாலந்து நாட்டில் உள்ள 10 ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழு ஓன்று தற்போது பரவி வரும் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கொரோனா என்ற வைரஸ் குடும்பத்தில் முதல் 6 பிரிவுக்கு இவர்கள்தான் மருந்து கண்டுபிடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பரவி வரும் 7 வது பிரிவுக்கும் தாங்கள் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அந்த ஆராய்ச்சியளர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் கண்டுபிடித்த புதிய தடுப்பு மருந்தை எலியிடம் செலுத்தி சோதனை செய்ததாகவும், அந்த முயற்சியில் வெற்றி கிடைத்ததை தொடர்ந்து கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த சோதனை சர்வதேச அளவில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதில் வெற்றி கிடைக்கும் பட்சத்தில் இந்த மருந்தை அதிகளவில் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கிவிடும் எனவும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments