சற்றுமுன்: சஞ்சய்க்கு என்ன ஆச்சு? அஜீத் கேள்வியால் கண் கலங்கிய விஜய் !

Post a Comment
சஞ்சய் நிலை குறித்து விஜய்யிடம் தொலைபேசியில் அஜித் நலம் விசாரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலகமெங்கும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சில நாடுகளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இதனிடையே, விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் படித்து வருகிறார். அவரும் கரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியாவுக்குத் திரும்ப முடியவில்லை என்று விஜய் வேதனையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.ஆனால், சஞ்சய் மிகவும் பத்திரமாக இருப்பதாகவும், விஜய் அவ்வப்போது மகனிடம் பேசி வருவதால் அவர் கவலையில் இல்லை என்றும் விஜய் தரப்பு தெரிவித்தது. தற்போது மகனின் நிலை குறித்து விஜய்யிடம் அஜித் பேசி நலம் விசாரித்ததாகத் தகவல் வெளியானது.

இது தொடர்பாக விஜய் தரப்பில் விசாரித்தபோது, "விஜய் - அஜித் இருவரும் இப்போதைக்குப் பேசவில்லை. எப்படித்தான் இப்படி ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. விஜய் - அஜித் இருவருமே அவர்களுடைய உலகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்" என்று தெரிவித்தனர்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter