சித்த மருத்துவத்தில், சிறு நீரக வியாதி, தோல் சுருக்கம் தொண்டை வலி, தொண்டை தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதில் இது ஒரு அருமருந்து !

இந்த உப்பு இல்லாமல் சித்த மருத்துவமே இல்லை என்று சொல்லுமளவிற்கு இது மருத்துவத்தில் அதி சிறந்த பொருளாக உள்ளது. சாதாரண உப்பு தானே என்று இத்தனை நாள் நினைத்திருந்தால் அது மிக தவறு. அது எப்படி எல்லாம் சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது என்னென்ன நோய்களுக்கு தீர்வாகிறது என்பதை அறிந்துகொள்வோம்....

இந்துப்பு அதன் பலன்களும்
இந்துப்பு என்று அழைக்கப்படும் பாறை உப்பானது இமாலய உப்பு என்றும் அழைக்கப்படுகிறது. பஞ்சாப் ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் இமயமலைப் பகுதிகளிலும் வெட்டி எடுக்கப்படுகிறது இதில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன மேலும் சித்தமருத்துவ தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது

இதில் அடங்கியுள்ள சேர்மானங்கள்

சோடியம் குளோரைடு பொட்டாசியம் குளோரைடு சோடியம் மாங்கனீஸ் இரும்பு துத்தநாகம் உள்ளிட்ட பல்வேறு தாதுக்கள் வெவ்வேறு அளவுகளில் அடங்கியுள்ளன

இந்து உப்பு பயன்படுத்தும் முறை

சித்த மருத்துவத்தில் இந்துப்பை சிறு நீரக மருந்துகளுடன் சேர்த்து கொடுக்கப்படுகிறது. இதை நேரடியாக கடல் உப்புக்கு பதிலாக சாப்பாட்டில் சேர்த்து பயன்படுத்தலாம். நாம் வழக்கமாக சமையலுக்கு பயன்படுத்தும் கடல் உப்பு அதிக உவர்ப்பு தன்மை உடையது, இந்து உப்பு குறைவான உவர்ப்பு தன்மை உடையது. இதை நேரடியாக உணவுகளுடன் சேர்த்து பயன்படுத்தலாம் தயிர், மேர் அனைத்திலும் பயன்படுத்தலாம்

இந்து உப்பு விலை

இந்து உப்பு ஒரு கிலோ 60 ரூபாக்கு விற்க்கப்படுகிறது. அரை கிலோ மற்றும் ஒரு கிலோவாகவும் கிடைக்கிறது.

இந்து உப்பு கிடைக்கும் இடங்கள்

நாட்டு மருந்து கடைகளில் கிடக்கும்.

இந்த உப்பு மருத்துவ பயன்

ஜீரணம் மற்றும் அஜீரண கோளாறுகளை சரிப்படுத்தும் ஜீரணத்திற்கு உதவுகிறது

inthuppu maruthuvam


உடலின் அமில கார நிலையை சமப்படுத்துகிறது

இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது

நுண்ணூட்டச் சத்துக்களை சமப்படுத்துகிறது

ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது

உடல் எடையை குறைக்க உதவுகிறது

எலுமிச்சை பழச்சாறுடன் இந்த குடிக்க இன்புளுவென்சா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும்
மூச்சுத்திணறலை கட்டுப்படுத்துகிறது

தொண்டை வலி மற்றும் தொண்டை சம்பந்தமான பிரச்சனைகளை கட்டுப்படுத்துகிறது

மூக்கு காது ஆஸ்துமா பிரச்சனைகளை கட்டுப்படுத்துகிறது

சதைப்பிடிப்பு போக்குகிறது

சிறுநீரகத்தை பாதுகாக்கிறது

தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும் தோல் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும் செல்களை புதுப்பிக்கும்

குளிக்கும் நீரில் உப்பை போட்டு குளிக்க உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தை உருவாக்குகிறது

நகத்திற்கு அடியில் உள்ள மஞ்சள் நிறத்தை நீக்கி நகத்திற்கு பாதுகாப்பளிக்கிறது

முடி வளர

இந்துப்பை ஷாம்பிள் போட்டு பயன்படுத்த முடி வளர உதவுகிறது, இருபது கிராம் இந்துப்பை ஷாம்பிள் கலந்து 20 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி நன்றாக வளரும்.

Post a Comment

0 Comments