கொரோனா வைரஸால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களில் கொரோனா வைரஸ் பரவுமா? என்ற கேள்வி பலரது மனதிலும் தற்போது எழுந்துள்ளது.
உண்மை என்னவெனில் இதுவரை அப்படி எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் உலக சுகாதார அமைப்பு சில பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க அறிவுறுத்துகிறது.
இவை தவிற பீன்ஸ், அவரை, தக்காளி என மற்ற காய்கறிகளைக் கழுவும் போது வெது வெதுப்பான சுடு நீரில் அலசிப் பயன்படுத்துங்கள்.
உண்மை என்னவெனில் இதுவரை அப்படி எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் உலக சுகாதார அமைப்பு சில பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க அறிவுறுத்துகிறது.
கீரை வகைகள்
கீரைகளை அலசும்போது அசுத்தமாக இருக்கும் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி மூழ்கும் அளவிற்கு ஊற வையுங்கள். சிறிது நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பின் வேர்களில் மண் நீங்கும் வரை அலசி சுத்தம் செய்து அதன் பிறகு கீரையைக் கிள்ளி பயன்படுத்துங்கள்.காய்கறி, பழங்கள்
காய்கறி, பழங்களை வெளியிலேயே நன்கு தண்ணீரில் அலசிவிட்டு உள்ளே எடுத்துச் செல்லலாம். 15 நிமிடங்களுக்கு அவை அப்படியே தண்ணீரிலேயே ஊற வைத்தலும் நல்லது.வேர் வகைக்காய்கள்
கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு, முள்ளங்கி என வேர் வகைக் காய்களை வாங்கி வந்ததும் தண்ணீரில் நன்கு அலசி ஓடும் தண்ணீரிலேயே பீலர் வைத்து தோலை சீவுங்கள். பின் மீண்டும் தண்ணீரில் மூழ்க வைத்து நறுக்கி சமைக்க பயன்படுத்துங்கள்.காளான்
காளான் பயன்படுத்தினால் அவற்றை தண்ணீரில் நன்கு அலச முடியாது. இருப்பினும் இந்த சமயத்தில் சுத்தம் அவசியம். எனவே தண்ணீரில் ஒரு அலசு அலசி உடனே எடுத்துவிடுங்கள். பின் அதில் ஏதேனும் அழுக்கு இருந்தால் கைகளால் எடுத்துவிட்டு உடனே துணியில் பரப்பி உலர்த்தி எடுங்கள்.இவை தவிற பீன்ஸ், அவரை, தக்காளி என மற்ற காய்கறிகளைக் கழுவும் போது வெது வெதுப்பான சுடு நீரில் அலசிப் பயன்படுத்துங்கள்.
Post a Comment
Post a Comment