அட்சய திருதியை தவற விட்டுட்டீங்களா? இது உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு ! நகை வாங்காமல் அதன் பலனை அனுபவிக்கலாம்..!

Post a Comment
கடந்த சில ஆண்டுகளில்தான் தமிழகம் உட்பட உலகெங்கும் அட்சய திருதியை பிரபல்யபட்டு வருகிறது. அன்று ஒரு குண்டு மணி அளவு தங்கம் வாங்கினால் கூட, வீட்டில் செல்வ செழிப்பு கூடும் என்பது நம்பிக்கை. நகையை வாங்கி, லட்சுமிக்கு பூசை செய்வதன் மூலம் மிகப்பெரிய செல்வ ஆற்றலை பெறலாம் என்பது ஐதீகம்.

நிற்க, ஆனால் இந்த லாக் டவுன் காலத்தில் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலையில் நகை வாங்குவதற்கு சாத்தியமே இல்லாமல் போய்விட்டது. ஆனால் அட்சய திரிதியைக்கான பலன் அப்படியே பெற முடியும். குறிப்பாக ஏழை எளியவர்கள் கூட இதை செய்து முழு பலனை அனுபவிக்கலாம். அட்சய திருதியை தவற விட்டவர்கள் கூட வெள்ளிக் கிழமைகளில் அருகில் இருக்கும் மளிகை கடையில் உப்பு, மற்றும் மஞ்சள் புதியதாக வாங்கி, அதிலிருந்து எடுத்து சமைக்கப்படும் உணவினை ஏழைகள், விலங்குகள், பறைவைகளுக்கு அளிப்பதன் மூலம் அதன் நன்மை முழுமையாக கிடைக்கும்.

atchaya thiruthiyai


வாங்கி வந்த மஞ்சள், உப்பை லட்சுமிக்கு வைத்து படைத்து பூசை செய்து வணங்குவதன் மூலம் அட்ச திருதியைக்கு நகை வாங்கிய அனுகூலத்தை பெற முடியும்.

இதில் என்ன விசேஷமென்றால், அன்றைய அட்சய திருதியை தவற விட்டவர்களும் கூட அடுத்த நாள், அல்லது ஏதேனும் ஒரு நல்ல நாளாக பார்த்து இந்த முறையை ப்பயன்படுத்தி, செல்வ லட்சுமியின் வரத்தை பெறலாம்.

அட்யச திருதியை தவற விட்டு விட்டோமே என்று பதற தேவையில்லை. கடவுளாக பார்த்து நம்மை வீட்டில் அடைந்து வைத்து இருக்கிறார். கொ .. ரொன..னோ வடிவில் நம்மை அச்சுறுத்தி இயற்கை எதிராக எதையும் செய்ய வேண்டாம் என பாடத்தை புகட்டிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது, பூசை புனஸ்காரங்கள் வீட்டிலேயே செய்ய வேண்டும். மனதார கடவுளை வேண்டுவதோடு மட்டுமல்லாமல், தூய்மை பேண வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றுவதன் மூலம் நோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.

அட்சய திருதியை மட்டுமல்ல.. மற்ற எந்த ஒரு பண்டிகையானாலும் கூட மிக சுலபமாக, எளிதாக வீட்டிலேயே கொண்டாடி மகிழலாம். அனைத்திற்கான பலன்கள் முழுமையும் இந்த வீட டங்கு உத்தரவு நேரத்ததில் அனுபவிக்க முடியும். இது கடவுளின் சித்தம்.


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter