இந்தியாவில் ஒரே நாளில் 2000 பேருக்கு கொரோனோ தொற்று ! ஊரடங்கு தளர்த்தலால் இந்த எண்ணிக்கை கூடும் அபாயம் !

Post a Comment
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் வைரஸ் அதிவேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இறப்பு விகிதமும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 33050 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona paraval


கொரோனா பரிசோதனை


கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1718 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 67 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1074 ஆக உயர்ந்துள்ளது. 8325 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு எண்ணக்கையில் மகாராஷ்டிர மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு மொத்தம் 9915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 432 பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத்தில் 4082 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 197 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் 2561 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 129 பேர் மரணம் அடைந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 3439 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஊரடங்கு தளர்த்தல் விதிகளால் இன்னும் இது அதிகமாக ‘சமூக பரவல்’ என்ற நிலைக்கு சென்று விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. 

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter