கண்டுபிடிக்கப்பட்டது கொரோன தடுப்பு மருந்து ! 100% குணப்படுத்தும் என மருத்துவர்கள் நம்பிக்கை !

Post a Comment
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும்  அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும் முயற்சி செய்து வருகின்றன. குட் நியூஸ்… கொரோனாவை 100% குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பை குணப்படுத்த ஒவ்வொரு நாடும் முயற்சி எடுத்து வரும் நிலையில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்த மருந்து 100 சதவீதம் பயன்தரும் வகையில் இருப்பது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

 இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த புளுரிஸ்டெம் தெரபிடிக்ஸ் என்ற உயிரி தொழில் நுட்ப நிறுவனம் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மீது சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாச கோளாறு, இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் செயலிழந்த கொரோனா பாதிப்பு நோயாளிகளையும் இந்த மருந்து குணப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் உள்ள மருத்துவ மையத்தில் கொரோனா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள புளுரிஸ்டெம் தெரபிடிக்ஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரி யாகி, பரிசோதனை விரைவில் முடிவு பெறும் என்றும், அதனைத் தொடர்ந்து மருந்துக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

corono maruthuvam



இந்த மருந்தை கொரோனா பாதித்தவரின் உடலில் செலுத்துவதன் மூலம் செல்கள் கிளர்ச்சி அடைந்து கொரோனா வைரசுக்கு எதிராக தீவிரமாக செயல்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த மருந்து கொரோனா வைரஸ் உடல் உறுப்புகளை  செயலிழக்க செய்வதைத் தடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளதாக எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம்  முதலில் தெரிவித்துள்ளது.

இதனால் விரைவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தடுப்பு மருந்து நிறுவனத்தோடு இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாகவும், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அடுத்த கட்ட முயற்சிக்கு  செல்லும் பட்சத்தில், தடுப்பூசி மூலம் கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம் என்றும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷைய்யன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.



ரிவர்ஸ் வேக்ஸினாலஜி என்ற முறையில் கொரோனா வைரஸை தடுக்கும் புரதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் மில்லியன் கணக்கான டாலர்களை செலவு செய்து மருந்து கண்டுபிடித்து வரும் நிலையில் தமிழகத்தின் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முதல் கட்ட வெற்றி அடைந்துள்ளது பெருமைக்குரியதாகக் கருதப்படுகிறது. கண்டுபிடிப்பு! 

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter