இப்படி செய்தால் தீராத முதுகு வலி கூட தீர்ந்துவிடும் ! 100% உறுதி !

Post a Comment
தீராத முதுகு வலி வந்து அவஸ்தை படறீங்களா? இப்படி செய்யுங்களேன் !


முதுகு வலியை முழுமையாக நீக்கும் யோகா
நமக்கு உதவி செய்தவர்களை பற்றி சொல்லும் போது, அவர் தான் என் முதுகெலும்பாக இருக்கிறார் என்போம். அந்த அளவுக்கு முதுகெலும்பின் மீது நமக்கு மரியாதை.

இந்த முதுகுத்தண்டை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், இதன் நீளம் பதினாறரை அங்குலம். இது நரம்பு நாளங்களாலானது. இதிலிருந்து 12 இணை நரம்புகள் மூளைக்கு செல்கின்றது. 36 இணை நரம்புகள் உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செல்கின்றது. அதனால் முதுகுத்தண்டு மனிதனின் இரண்டாவது மூளை என்றே அழைக்கப்படுகிறது.

மனித உடலில் நடுப்பகுதியான முதுகில் 33 முதுகெலுப்புகள் ஒன்றன் மீது ஒன்றாக நேர் வரிசையில் அடுக்கப்பட்டு அற்புதமாக இந்த உடல் கட்டப் பட்டுள்ளது. இந்த முதுகெலும்பு வழியாகத் தான் முதுகுத் தண்டுவடம் உள்ளே செல்கிறது. இந்த முதுகெலும்பில் 24 எலும்புகள் தனித் தனியானவை. அசையும் தன்மை வாய்ந்தவை. மற்ற 9 எலும்புகள் இணைந்து இரண்டு அசையா எலும்புகளாக இடுப்புக்கு அடியில் மாறி விடும்.

முதுகுவலி உணர்த்துவது என்ன?


மனிதனின் உடல் உள்ளுறுப்புகள் பழுதடைந்தால், அல்லது ஒழுங்காக இயங்கவில்லை என்றால் அது முதுகெலும்பில் வலியாக நமக்கு உணர்த்தும்.

அடி முதுகில் வலி ஏற்பட்டால் நமது உடலில் கோணாடு சுரப்பி ஒழுங்காக இயங்கவில்லை. சிறுநீரகம் சம்பந்தமான வியாதி வருவதற்கு ஒரு அறிகுறி தான் இந்த அடி முதுகு வலி. இதே போல் நடு முதுகில் வலி ஏற்பட்டால் சிறுகுடல், பெருங்குடல் ஒழுங்காக இயங்கவில்லை என்று அர்த்தம். கழுத்து வலி, முதுகு வலி ஏற்பட்டால் இதயம், நுரையீரல் ஒழுங்காக இயங்கவில்லை என்று அர்த்தம்.

முதுகுவலி வரக் காரணங்கள்


ஒரே இடத்தில பல மணி நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி ஏற்படும்.

தொப்பை போட்டவர்களுக்கும் அதிக நேரம் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கும் அடிமுதுகு வலி வரும். அளவுக்கு அதிகமான எடையுள்ள பொருட்களை தூக்கினாலும் அடிமுதுகு வலி ஏற்படும்.
தொடர்ந்து அலுவலகத்தில் ஒரே இடத்தில அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் அடிக்கடி சளி பிடித்தல், மூக்கடைப்பு, இருமல் உள்ளவர்களுக்கும், அதிகம் கவலைப் படுபவர்களுக்கு இதயம் பாதிப்பால் கழுத்து முதுகு வலி ஏற்படும்.

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகி அதனால் அடிக்கடி காய்ச்சல் வருபவர்களுக்கு முதுகு முழுவதும் வலி இருக்கும்.
எதிர்பாராத விபத்தினால் முதுகில் பலம் வாய்ந்த அதிக எடையுள்ள பொருட்கள் விழுந்தாலும் டிஸ்லொகேட் ஆகி முதுகில் வலி ஏற்படும்.
நம் உடல் எப்பொழுதும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்று கொண்டே இருக்கும். அதற்கு யாரும் சொல்லித் தர தேவையில்லை. ஒரு பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறாள் அம்மா. ஒரு நாள் அந்த குழந்தைக்கு வெளியில் பசும்பாலை வாங்கி கொடுக்கிறாள். அந்த பால் நச்சுத் தன்மை உள்ளதாக இருக்கிறது.

அதை தாய் தெரியாமல் கொடுத்து விடுகிறாள். ஆனால் குழந்தையின் வயிற்றுக்குள் சென்ற பாலை ஐந்து நிமிடத்தில் குழந்தை வொமிட் செய்துவிடுகிறது. இந்த உடல் தன்னை பாதுகாக்க தானாக அந்த உணவை வெளித்தள்ளி விடுகிறது.
ஏன் இதை இங்கு சொல்கிறேன் என்றால், எனக்கு முதுகுவலி வந்துவிட்டது என்று யாரும் வருந்த வேண்டாம். பயப்பட வேண்டாம். அவசரப்பட்டு உடனே அறுவை சிகிச்சைக்கு சென்று விடாதீர்கள். யோகா செய்யுங்கள்.

muthugu vali neenga yoga


புஜங்காசனம்


புஜங்கம் என்றல் பாம்பு. ஒரு பாம்பு படம் எடுத்து நிற்பது போன்று தோற்றம் கொண்டதால் இந்த பெயர் பெற்றது.

விரிப்பில் கிழக்கு நோக்கி குப்புற படுத்துக் கொள்ளுங்கள்.

இரு கைகளையும் ஒன்றின் மேல் ஒன்று வைத்து அதில் நெற்றியை வைத்து முதலில் இருபது விநாடி ஓய்வெடுத்து மூச்சோட்டதை சரி செய்யவும்.

பிறகு இரு கைகளையும் இதயத்தின் பக்கத்தில் வைக்கவும்.
கை விரல்கள் தரையில் இருக்க வேண்டும்.

இப்போது மெதுவாக மூச்சை உள்ளிழுத்து தலையை உயர்த்தி முதுகை பின் பக்கமாக வளைத்து கண்கள் வானத்தை நோக்கி பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் மூச்சடக்கி பத்து வினாடி இருக்கவும்.
பின் மெதுவாக மூச்சை வெளியில் விட்டு சாதாரண நிலைக்கு வரவும்.

சற்று ஓய்வெடுத்து விட்டு மீண்டும் ஒரு முறை செய்யவும்.
இதே போல் காலை, மாலை செய்ய வேண்டும்.

முக்கிய குறிப்புக்கள்…


இந்த ஆசனத்தை ஒரு மாதம் தொடர்ந்து பயிற்சி செய்தால் தான் முழுமை நிலை வரும்.

முதலில் உடலை வளைக்கும் போது மெதுவாக வளைக்கவும். எந்த இடத்திலாவது வலி ஏற்பட்டால் நிறுத்தி கொள்ளவும்.

முதுகு தண்டில் அதிக வலி உள்ளவர்கள், முதுகெலும்பு விலகியிருந்தால் மருத்துவர் ஆலோசனை பெற்று செய்யவும்.

அல்லது யோகா வல்லுனரின் நேரடி பார்வையில் செய்யவும்.

சாதாரண வலி, அலுவலகத்தில் ஒரே இடத்தில அமர்வதால் வரும் வலி, இரு சக்கர வாகனம் அதிகம் ஓட்டுவதால் வரும் வலி உள்ளவர்கள் தாராளமாக இதனை செய்யலாம். 10 நாளில் பறந்துவிடும் முதுகு வலி. இது உண்மை!

இந்த புஜங்காசனம் முதுகுவலியை மட்டும் போக்குவதில்லை இதோ இதன் மற்ற பலன்கள்…

ஆஸ்துமா, நுரையீரல் பலவீனம், ரத்தத்தில் சளி (ஈஸ்னோபைல்) ஆகியவற்றை நீக்குகிறது.

கிட்னியை பலப்படுத்தி நன்றாக இயங்க செய்கிறது.

பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை கோளாறுகளை எளிதில் போக்கும். வெள்ளைப்படுதல், மாதவிடாய் தள்ளிப்போதல் அல்லது முன்பே வருதல், மாதவிடாய் சமயம் வயிற்று வலி போன்றவை நீங்கும்.

மலச்சிக்கல் நீங்கும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.


இது பெண்களுக்கு…


மாதவிடாய் காலத்தில் நான்கு நாட்கள் யோகாசனம் மட்டும் உடற்பயிற்சி செய்யக்கூடாது. ஐந்தாவது நாளிலிருந்து பயிற்சி செய்யலாம். சிலர் தவறாக மாதவிடாய் காலங்களிலும் உடற்பயிற்சி செய்து விட்டு, பிறகு முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter