பல் பள பள ன்னு வெள்ளை வெளேரேன்னு மாறனுமா? அப்போ இப்படி செய்யுங்க !

Post a Comment
எந்த பிரச்னையாக இருந்தாலும் ஒற்றை புன்சிரிப்பு போதும் எல்லாம் துளாகும். அப்படி புன்னகையை உதிர்க்கும் போது பற்கள் மஞ்சளாக இருந்தால்..எவ்வளவு சங்கடமாக இருக்கும். இதற்குதான் இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க.

எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாறு பற்களின் மஞ்சள் கறையை நீக்கி வாயில் உள்ள கிருமிகள் , துர்நாற்றத்தையும் அழிக்கும். எனவே பேஸ்டுடன் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறையும் ஊற்றி தேய்த்து பாருங்கள் அல்லது தனியாகவும் எலுமிச்சை சாறை பற்களில் தேய்க்கலாம்.

பேக்கிங் சோடா : நச்சு நீக்கியாக செயல்படும் பேக்கிங் சோடா பற்களின் கறைகளையும் நீக்க உதவும். எனவே பேக்கிங் சோடாவை பற்களில் தேய்த்துப் பாருங்கள். பேக்கிங் சோடா அலர்ஜியை உண்டாக்கினால் தவிர்ப்பது நல்லது.

தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் : தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றை வாயில் ஊற்றி நன்குக் கொப்பளியுங்கள். நுரை வரும் அளவிற்குக் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால் மஞ்சள் கறை நீங்குவது மட்டுமன்றி; வாய் துர்நாற்றம், சொத்தை, ஈறுகள் வீக்கம் போன்ற பிரச்னைகளும் நீங்கும்.

pal pala palakka


ஆப்பில் சிடர் வினிகர் : ஆப்பில் சிடர் வினிகரை பயன்படுத்தியும் வாயைக் கொப்பளித்து வந்தால் மஞ்சள் கறை நீங்கும். பற்களின் துர்நாற்றம் போகும்.

அலுமினியத் தாள் கலவை : பேஸ்ட், பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு, ஆப்பில் சிடர் வினிகர், தேங்காய் எண்ணெய் என மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு அலுமினியத் தாளில் பரப்புங்கள். அதை அப்படியே எடுத்து பற்களைச் சுற்றிலும் ஒட்டுங்கள்.

இரண்டு நிமிடங்கள் கழித்து தாளை எடுத்துவிட்டு வாயை தண்ணீரால் கொப்பளியுங்கள். பின் மீதமிருக்கும் கலவையையும் பற்களில் கைகளை வைத்து தேயுங்கள். மீண்டும் கொப்பளியுங்கள். இதனால் உடனே நல்ல பலன் கிடைக்கும். இந்தக் கலவையை அப்போதே செய்து தீர்க்க வேண்டும். மறுநாள் பயன்படுத்தக் கூடாது.

மேலே குறிப்பிட்ட எதுவும் உங்களிடம் இல்லை என்றாலும் பரவாயில்லை. பேஸ்டுடன் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் பேக்கிங் சோடா கலந்து அந்த கலவையை அலுமினிய காகிதத்தில் வைத்து பற்களில் ஒட்டிக் கொள்ளலாம். மேலே குறிப்பிட்ட எதுவும் உங்களிடம் இல்லை என்றாலும் பரவாயில்லை. பேஸ்டுடன் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் பேக்கிங் சோடா கலந்து அந்த கலவையை அலுமினிய காகிதத்தில் வைத்து பற்களில் ஒட்டிக் கொள்ளலாம்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter