தேவையான பொருட்கள்
- காராமணி - 1 கப்
- தண்ணீர்
- உப்பு
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 1
- துருவிய தேங்காய்
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் - 2
- பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
- கறிவேப்பிலை
காராமணிசுண்டல் செய்முறை
1. காராமணி சுண்டல் செய்ய ஒரு பாத்திரத்தில் காராமணியை எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
2. மூன்று மணி நேரம் கழித்து ஊறவைத்த காராமணியை குக்கரில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
3. அடுத்து ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ,பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.
4. வெங்காயம் இளர் பொன்னிறமானவுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வேகவைத்த காராமணி, தேவையான அளவு உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும்.
5. சுவையான மற்றும் எளிமையான காராமணி சுண்டல் தயார்
Post a Comment
Post a Comment