இதயத்துக்கு வலுசேர்க்கும் உணவு வகைகள்.!

கீரைகளில் இதயபலத்துக்கு உதவும் சத்துக்கள் உள்ளன. எனவே தினமும் ஏதேனும் ஒரு கீரையை சாப்பிடுவது நல்லது.

முழுதானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிவப்பு அரிசியும் உடலுக்கு வலு சேர்க்கும். இதயத்தைப் பாதுகாக்கும்.

ஓட்ஸில் நார்ச்சத்துகள் மிகுந்துள்ளன. இது கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன் இரத்த ஒட்டத்தையும் சீராக்கும். இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.ஆப்பிள் இதயத்துக்கு மிகவும் நல்லது. இது இரத்தம் உறைவதைத் தடுக்கும்.

பாதாம் எண்ணெய்யில் விட்டமின் "இ' உள்ளது. இது உடலிலுள்ள கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். இதயநோய் அண்டாமல் தடுக்கும்.

ithayam balam pera unavugal


தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜுஸ் குடிப்பது இதய நோய் வராமல் நம்மை காப்பாற்றும்.

ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, மல்பெர்ரி போன்ற பழவகைகளில் அதிக அளவு விட்டமின்"சி' கால்சியம், பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளன. தினமும் காலையில் ஓட்ஸூடன் ப்ளுபெர்ரி பழம் சாப்பிட இதயம் சீராக இயங்கும்.

சோயா உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயநோய் வருவதைத் தடுக்கிறது. பாலுக்கு பதில் சோயா பாலை காலையில் அருந்தலாம். இதயம்
வலுப்பெறும்.

உப்பு இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும் போதெல்லாம் இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

Post a Comment

0 Comments