இந்த பூ மட்டும் போதும். உங்க சர்க்கரை வியாதி கட்டுக்குள் வந்திடும் !

Post a Comment

40 வயதிற்கு மேல் அனைவருக்கும் சர்க்கரை வியாதி என்பது எழுத்தபடாத விதியாகவே இந்திய வாழ் மக்களுக்கு ஆகி விட்டது. 35 வயது முடிந்து விட்டாலே வாழ்க்கையில் அனைத்துமே முடிந்து விட்டது போன்ற ஒரு உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். காரணம், சுற்றுச்சூழல் மற்றும் உணவுமுறைகள், வாழ்வியல் மாற்றங்கள் தான்.

சர்க்கரை நோய் வருவதோடு மட்டுமல்லாமல், அது சொல்லாமல் கொள்ளாமல் உடலுறுப்புகளை சேதப்படுத்தவும் வழி வகுப்பதால்தான், கை கால் மரத்து போதல், இரத்த ஓட்டும் இல்லாமல், புதிய செல்கள் உருவாகாத நிலைமையில் மூட்டு, கைகால்களை நீக்கும் அளவிற்கு கடுமையானதாக மாறிவிடுகிறது. நவீன மருத்துவத்தில் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு, புண் ஆன கால், கைகளை வெட்டி எடுப்பது மட்டுமே தீர்வாக காணப்படுகிறது. அப்படி இல்லாமல் இயற்கை உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை மிக எளிதாக கட்டுக்குள் கொண்டு , இயல்பான வாழ்க்கை வாழலாம். அந்த வகையில் பயன்படும் ஒரு இயற்கை உணவு தான். வாழைப்பூ.

வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்த பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும்.

* கை, கால் எரிச்சலுக்கு வாழைப்பூவை இடித்து, அதில் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் ஒற்றடமிட்டு கட்டலாம்.

* வெள்ளைப்படிதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை ரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

* வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து, அதில் சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல், பெரும்பாடு, வயிற்றுக்கடுப்பு போன்றவை நீங்கும்.

sarkkarai viyathi gunamaga


* வாழைப்பூ சாற்றுடன் கடுக்காய் பொடி சேர்த்து குடிக்க மூல நோய் குணமாகும். வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் குணமாகும். தாது விருத்தியடையும். * வாழைப்பூவின் நரம்பை நீக்கிவிட்டு, அதை ஒரு பாத்திரத்தில் இட்டு அவித்து, பின்னர் சாறு பிழிந்து, அந்த சாற்றை குடிக்க சீதபேதி, கழிச்சல் போன்றவை குணமாகும்.

* வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் இருந்தாலும் தீரும். * உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

* வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.

* சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter