மஞ்சள் கலந்த துளசி நீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

Post a Comment
சாதாரண நீரை குடிப்பதே உடலுக்கு மிக நன்மை தரும். அதில் துளசி, மஞ்சள், மிளகு கலந்த நீரை குடித்தால். அது தேவாமிர்த்திற்கு ஒப்பாகும். அந்தளவிற்கு அதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. என்னென்ன நன்மைகள் கிடைக்கிறதென்று பார்ப்போமா?

ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்கவைத்து, பின்னர் அதனுடன் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவேண்டும். இதனை தினமும் குடித்து வந்தால் பலவகையான நோய்கள் குணமடைகிறது. சளியினால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க இந்த பானத்தை  குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

இயற்கையான முறையில் தாயாரித்த துளசி பானத்தை தினமும் குடிப்பதால், வாய் மற்றும் வயிற்றில் ஏற்படும் புண்களை குறைத்து, அல்சர் பிரச்சனையில் இருந்து தடுக்கிறது. மேலும் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

thulasi kalantha manjal neer


தினமும் காலையில் மஞ்சள் கலந்த துளசி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலி  தடுக்கிறது.

ஆஸ்துமா உள்ளவர்கள், துளசி நீரில் மஞ்சள் கலந்த பனத்தை குடித்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டு நம்மதியாக  சுவாசிக்கும் உணர்வை ஏற்படுத்தும்.

water with tulsi turmeric benefits


துளசி நீரில் மஞ்சள் கலந்து அதிகாலையில் எழுந்ததும் குடித்து வந்தால், கெட்ட கொழுப்பு செல்கள் கரைத்து, கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை  குறைக்கிறது.

துளசி பானத்தை தினமும் காலையில் குடித்து வந்தால், நரம்புகள் வலுவடைந்து, மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது.

துளசி மற்றும் மஞ்சள் கலந்த பானத்தை குடிப்பதால், குடலியக்கத்தை மேம்படுத்துகிறது. இதனால் அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கல்  அவஸ்தையிலிருந்து விடுபட வைக்கிறது.

துளசி நீரில் மஞ்சள் கலந்து குடிப்பதால், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, வயிற்றில் உள்ள அமிலத்தின் தீவிரத்தைக் குறைத்து, அசிடிட்டி  போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.


#மஞ்சள்நீர் #துளசிநீர் #மருத்துவகுணம் #தமிழ்மருத்துவம்

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter