சுவையான இடியாப்பம் செய்வது எப்படி?


சுவையான இடியாப்பம் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம். 

தேவையான அளவு அரிசி மாவு எடுத்துக்கொள்ளவும். தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பைச் சேர்த்துக் கொள்ளவும். இந்த கொதிநீரை அரிசி மாவில் சேர்த்து சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். 

இப்படி பிசைந்த மாவை இடியாப்ப இயந்திரத்தில் இட்டு இடியாப்பம் பிழிந்து இட்லி தட்டுகளில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம். இதோடு தேங்காய் துருவல் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.


idi appam seivathu eppadi



இடியாப்பம் - 2



தேவையான அளவு அரிசி மாவு எடுத்து தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு மூடி தேங்காய் துருவலுடன் கசகசா சிறிது கலந்து போதுமான அளவு வெல்லம் சேர்த்து இந்த கொதிநீரை அரிசி மாவில் கொட்டி பிசைந்து இடியாப்ப இயந்திரத்தின் உதவியால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். 

பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து இட்லி தட்டுகளில் இந்த பிழிந்த இடியாப்பத்தை வைத்து ஆவியில் நன்கு வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான். இடியாப்பம் ரெடி. சுட சுட வீட்டில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கலாம். விரும்பி சாப்பிடுவர். இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்டு கேட்டு சாப்பிடுவர். 

#இடியாப்பம் #சுவை #சமையல் #குறிப்புகள்

Post a Comment

0 Comments