தித்திக்கும் பனங்கற்கண்டு பாயாசம் செய்வது எப்படி?

தமிழில் சமையல் கலை என்பது மிக குறைவாகவே உள்ளது. அதுவும் நம் பாரம்பரிய சமையல் முறைகள் அனைத்தும் தற்பொழுது அருகி வருகிறது. பெருகி வரும் வெளிநாட்டு உணவு முறைகளால் நாம் ஆரோக்கியம் கெட்டு, மிக விரைவில் நோயாளிகளாகி விடுகிறோம்.

அந்தக் காலத்தில் செய்யப்பட்ட உணவு முறைகள், மற்றும் உணவுகள் அனைத்தும் தேகத்திற்கு ஆரோக்கியத்தையும், நல்ல திடமான உடலையும் கொடுத்தன. அந்த வகையில் இன்று "தித்திக்கும் பனங்கற்கண்டு செய்வது எப்படி" என்பதை இந்த பதிவின் வழியாக அறிந்துகொள்வோம்.



pana karkandu payasam


தேவையான பொருள்கள்:

பனங்கற்கண்டு - 100 கிராம்

 பாதாம் - 20 கிராம்

 முந்திரி - 20 கிராம்

 உலர் திராட்சை - 10 கிராம்

 பால் - 1/2 லிட்டர்

 நெய் - 50 கிராம்

 செய்முறை:

பாதாம் பருப்பை ஊறவைத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ள வேண்டும். பாலை அடுப்பில் வைத்துப் பொங்கி வரும் வரை காய்ச்ச வேண்டும். அதில் பொடித்த பாதாம் பருப்பைப் போட்டுக் கிளற வேண்டும் பனங்கற்கண்டைப் பொடி செய்து. பாலில் சேர்த்துக் கிளற வேண்டும். பின் நெய்யில் பொடித்த முந்திரி, உலர் திராட்சை வதக்கி பாயாசத்தில் சேர்க்க வேண்டும். பனங்கற்கண்டு சேர்ப்பதால் இனிப்பு திகட்டாமல் சுவையாக இருக்கும். இது சத்தானதும் கூட!

Post a Comment

0 Comments