உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால் ஏற்படும் விளைவுகள் !

Post a Comment
சிலருக்கு அடிக்கடி உடற்சி செய்ய முடியாது போகலாம். நேரமின்மை மற்றும் சோம்பேறித்தனம் இந்த இரண்டு காரணங்களால் தான் இப்படி ஒருவர் அன்றாட உடற் பயிற்களிலிருந்து விடுபட காரணமாக இருக்கிறது. அப்படி விட்டு விட்டு ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒருமுறை உடற்பயிற்சி செய்வதால் என்னாகும்? உங்களது உடல் என்னென்ன விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை தெரிந்துகொள்வோம்.

பெரும்பாலும் உடற்பயிற்சியைத் தவிர்க்கிறீர்களா? நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால் உங்கள் உடலுக்கு என்ன நடக்கிறது என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். உடற்பயிற்சி என்பது உடலுக்கும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானதாகும். சோம்பேறித்தனம் அல்லது வேலைகளில் பிஸியாக இருப்பது காரணமாக உங்கள் வழக்கமான உடற்பயிற்சியைத் தவிர்க்க நேரிடலாம். அப்படி நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால் உங்கள் உடல் பல சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும்.

உடலுக்கு வழக்கமான உடற்பயிற்சி மிகவும் அவசியம். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. செயலற்ற தன்மை உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தி உங்கள் உடலை எதிர்மறையாக பாதிக்கும். உங்கள் உடல், மன மற்றும் உடலின் அனைத்து அத்தியாவசிய உறுப்புகளுக்கும் உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சி பற்றாக்குறையாக இருந்தால் எடை அதிகரிக்குன் என்பதைவிட, மேலும் சில உடல்நல தீங்குகளும் ஏற்படும். இது இதய நோய்கள் மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தையும் அதிகரிக்கும். உடற்பயிற்சியின்மை காரணமாக உங்கள் உடல் எதிர்கொள்ளக்கூடிய பல இடையூறுகள் உள்ளன. உங்களுக்கு உடற்பயிற்சி செய்ய மிகவும் சோம்பலாக இருந்தால், அதனால் உங்கள் உடலில் எந்த மாதிரியான பாதிப்புகளை மேற்கொள்ளும் என்பதை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

உடற்பயிற்சி செய்யாவிட்டால் அல்லது மிகக் குறைவாக உடற்பயிற்சி செய்வதால் நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய சில காரணிகள் இங்கே.


1. தசை வலிமையை இழக்கலாம்..!

நீங்கள் போதுமான உடற்பயிற்சி செய்யாவிட்டால், உங்கள் தசைகள் பாதிக்கப்படலாம். உங்கள் தசைகள் போதுமான அளவு நகராததால் அவை வலிமையை இழக்கக்கூடும். உடற்பயிற்சி உங்கள் தசைகளுக்கு மிகவும் முக்கியமானது மற்றும் தசைகளை உருவாக்க உதவுகிறது.

2. நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படக்கூடும்.!

சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி என்பது நோய்களுக்கு எதிராக போராட ஒரு வலுவான வழிமுறையாகும். உடற்பயிற்சியின்மை நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். நீங்கள் உடற்பயிற்சியின்மை காரணமாக அடிக்கடி நோய்வாய்ப்படலாம்.

86lrjhc8
நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்படக்கூடும்
Photo Credit: iStock

3. இது உங்கள் தூக்க முறையை (sleeping pattern) பாதிக்கிறது

உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தூக்கம் முக்கியம். வழக்கமான உடற்பயிற்சி சிறந்த தூக்கத்தை உறுதி செய்கிறது. நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால், போதிய தூக்கத்தை நீங்கள் பெறமுடியாமல் போகலாம். வேலை செய்யத் தொடங்குங்கள், மேலும் நீங்கள் சிறந்த தூக்கத்தை அனுபவிக்கலாம். சில நாட்களிலேயே நீங்கள் அந்த வித்தியாசத்தைக் காணலாம்.

4. எல்லா நேரத்திலும் அழுத்தமாக இருப்பீர்கள்..!

மன அழுத்தம் என்பது ஒரு பொதுவான பிரச்சினை, அதை ஒரு நாளைக்கு பல முறை நீங்கள் அனுபவிக்கலாம். வேலை அழுத்தம், காலக்கெடு, தனிப்பட்ட பிரச்சினைகள் என நாள் முழுவதும் உங்களுக்கு மன அழுத்தத்தை தரக்கூடிய பல காரணிகள் உள்ளன. மன அழுத்தத்தை வெல்வதற்கான சிறந்த வழிகளில் உடற்பயிற்சி ஒன்றாகும்.

உடற்பயிற்சியின்மை மன அழுத்தத்தைத் தூண்டும்

5. உங்கள் மனநிலையும் பாதிக்கப்படக்கூடும்

நீங்கள் மனச்சோர்வாக அல்லது நாள் முழுவதும் மிகவும் எதோ ஒரு குறைவை உணர்கிறீர்களா? உடற்பயிற்சியின் பற்றாக்குறை இதற்கு காரணமாக இருக்கலாம். உடற்பயிற்சியும் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இது உங்களை அதிக ஆற்றலோடு உணர வைக்கிறது மற்றும் உங்கள் மனநிலையை அதிகரிக்கிறது. மனச்சோர்வு அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும் உடற்பயிற்சி உதவும்.

நீங்கள் உடற்பயிற்சி செய்யமுடியாத அளவிற்கு மிகவும் பிஸியாக இருக்கலாம், ஆனால் நடைபயிர்ச்சி போன்ற எளிமையான செயல் உங்கள் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும். உடற்பயிற்சியின்மை எலும்பு ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எனவே, நீங்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்ய சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter