நுரையீரல் நோய் குணமாக இந்த ஒரு கஷாயம் போதும் !

நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக காசு குடோரி லேகியம் 

Nurai eeral noigal gunamaga kasu guderi legiyam

காசு குடோரி லேகியம் செய்ய தேவையான பொருட்கள்

பகுதி 1

  1. சாதி கோஸ்டம் 10 கிராம்
  2. சித்தரத்தை  10 கிராம்
  3.  அக்கராரம்  10 கிராம்
  4. செவ்வியம்  10 கிராம்
  5. தாளிசபத்திரி  10 கிராம்
  6. அதிமதுரம்  10 கிராம்
  7. கண்டு பாரங்கி  10 கிராம்
  8. சுக்கு  10 கிராம்
  9. மிளகு 20 கிராம்

பகுதி 2

  1. ஈயக்கொடிச்சாரு 170 மில்லி
  2.  தூதுவளைச் சாறு 170 மில்லி
  3. சங்கம் இலைச்சாறு 170 மில்லி
  4. கண்டங்கத்திரி சாறு 170 மில்லி

பகுதி 3

  1. கற்கண்டு 1450 கிராம்
  2. பசுவின்பால் 500 மில்லி
  3. தேன்  200 மில்லி

காசு குடோரி லேகியம் செய்முறை

 பகுதி 1 கூறப்பட்ட 9 சரக்குகளையும் உலர்த்தி நன்கு இடித்து சூரணம் செய்து வைத்துக் கொள்க. அப்பால் கற்கண்டை பொடி செய்து ஒரு இரும்பு கடாயில் போட்டு பசுவின் பாலை விட்டு கரைத்து பகுதி 2ல் கூறப்பட்ட நான்கு சாறுகளையும் கூட்டி அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து பாகுபதம் வரும் சமயம் முன் தயார் செய்த சூரணத்தை கொட்டி தேன் விட்டு கிண்டி கீழிறக்கி ஆறவிட்டு வழித்து கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்துக.

nurai eeral noi


காசு குடோரி லேகியம் சாப்பிட வேண்டிய அளவு

இந்த லேகியத்தில் வேளைக்குப் புளியங்கொட்டை பிரமானம் காலை மாலை இரு நேரம் கொடுத்து வருக.

காசு குடோரி லேகியம் பயன்கள்

நாள்பட்ட ஈலை, இருமல், தீராத சுவாச காசம், கடுமையான தொண்டை சளி இவைகள் தீரும். நுரையீரல் சார்ந்த அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய முதன்மையான லேகியம்.

Post a Comment

1 Comments

  1. Please let me know where i will get this காசு குடோரி லேகியம்

    ReplyDelete