விஷ மருந்துகள் கொடுக்கும் பக்க விளைவுகளை முறிக்கும் மூலிகைகள் !

பாஷாண மருந்துகளின் பக்க விளைவுகளும், தீர்வும்

பாதரசம்

வெண் சங்கம் சாறு காரவல்லி சாறு இவற்றில் ஒன்றை வீசம்படி உள்ளுக்கு கொடுக்கவும் நீர் விட்டு அரைத்து சுண்டக்காய் பிரமாணம் உள்ளுக்கு கொடுக்கலாம்

வீரம்

நீலி வேரை மற்றும் சிறுநெருஞ்சி சார் விட்டு சாப்பிடலாம் நெய் செட்டி இலை  சாரையும் சாப்பிடலாம்

பூரம்

 துளசி சாறு சாப்பிடலாம் ஆமணக்கு நெய் அவரை அரைத்து சாப்பிடலாம் பாகல் இலைச்சாறு கொடுக்கலாம் நீலி வேர் ஆவாரம்பூ வெட்டி வேர் சீரகம் மாதுளம் விதை தென்னங்குரும்பை காசினி வேர் இவற்றை சம அளவாக எடுத்து கசாயம் செய்து சாப்பிடலாம்

visa marunthu effect neeka



கந்தகம்

ஆவாரம் வேறு தைவேலை வேறு நீலிவேறு சுக்கு பருத்தி இலை இவற்றை சம அளவாக எடுத்து கசாயம் செய்து சாப்பிடலாம், மிருதார்சிங்கி புங்கம் பட்டையை நீர்விட்டு அரைத்து வெந்நீரில் கலக்கி வடிகட்டி உள்ளுக்கு கொடுக்கலாம். மயில் துத்தம் எலுமிச்சம்பழம் ரசம் இஞ்சி ரசம் தேன் இவற்றை ஒன்றாகக் கூட்டி சாப்பிடலாம்.

தாமிரம்

எலுமிச்சம் பழச்சாறு சாப்பிடலாம் புளித்த மோர் கொடுக்கலாம்

கருவங்கம், வெல் வங்கம்

 கரும்பு ரசம் உட்கொள்ள கொடுக்க வேண்டும் .

அனைத்து பாசானங்களுக்கும் பொதுவாக முறிவு மருந்து 

அவுரி இலைச்சாறு வெண்ணீர் விட்டு அரைத்துக் கொடுப்பது சாலச் சிறந்தது.

Post a Comment

0 Comments