இது பெண்கள் ரகசியம் ! ஆண்கள் படிக்காதீங்க !

Post a Comment
ஒரு சில நோய்கள் பெண்களுக்கு மட்டும்தான் வரும். அதை பற்றிய கவலை நமக்கெதுக்கு என்று சிலர் அசட்டையாக இருந்துவிடுகின்றனர். ஆனால் பெண்களுக்கான நோய்கள் பற்றி ஆண்களும் தெரிந்துகொள்வதால்தான் அவர்களது துணைக்கு ஏதாவது பிரச்னை என்றால் உடனே அதற்கான முன்னெச்சரிக்கையாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல உதவியாக இருக்கும். அதுபோன்ற நோய் ஒன்றுதான் பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய். அதுபற்றி அதிக விபரமாக இங்கு தெரிந்துகொள்வோம். வாங்க நண்பர்கள..!

அக்டோபர் மாதம் உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகும். இந்தியாவில் மார்பக புற்றுநோயாளிகளில் கிட்டத்தட்ட அறுபது சதவிகிதம் நோய் அதன் கடைசி கட்டத்தில் இருக்கும் வரை கண்டறியப்படுவதில்லை. இது நோயைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாதிருப்பதைக் குறிக்கிறது.

மார்பக புற்றுநோயை சிறந்த பரிசோதனை முறையில் கண்டறிவது நோயிலிருந்து இறப்பு விகிதம் 40 சதவீதம் குறைகிறது. மார்பக புற்றுநோய்களில் சுமார் 5% முதல் 10% வரை பரம்பரையாக பாதிக்கப்படுவதா கருதப்படுகிறது, இது பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு அனுப்பப்படும் அசாதாரண மரபணுக்களால் ஏற்படுகிறது. எனவே மரபணு காரணிகள், புற்றுநோயின் குடும்ப வரலாறு மற்றும் வயது ஆகியவை ஆபத்து நிறைந்த காரணிகளாகத் தெரிகிறது.

மார்பக புற்று நோய் மற்றும் அதற்கான விழிப்புணர்வு குறித்து மருத்துவர் ஸ்ரீனிவாசன் நமக்கு பல தகவல்களை அளித்துள்ளார்.

tmlncclo


இந்தியாவில் மார்பக புற்றுநோயின் போக்கு குறித்து அறிய வேண்டியவை :

1. இந்தியாவில் இளைய வயதினரிடையே மார்பக புற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

2. நோயின் அறிகுறிகள் பெரும்பாலும் முற்றிய நிலையில் தான் பிரதிபளிக்கிறது, இது நோயாளியின் நீண்டகால உயிர்வாழ்வை நேரடியாக குறைக்கிறது.

3. விழிப்புணர்வு மற்றும் ஸ்கிரீனிங் இல்லாமை : மார்பக விழிப்புணர்வு, அறிகுறிகளைப் பற்றி அறிந்திருத்தல், அவற்றைத் தவறாமல் கவனித்தல், சரியான நேரத்தில் மருத்துவரிடம் புகாரளித்தல் இவை மார்பக புற்றுநோயை குணமளிக்க உதவுகிறது.

4. அனைத்து பெண் புற்றுநோய்களில், நான்கில் ஒரு பங்கு (அல்லது மூன்றில் ஒரு பகுதியை) மார்பக புற்றுநோய்கள் என ஆய்வறிக்கை கூறுகிறது.

மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் :

1. மார்பகத்தைச் சுற்றியுள்ள திசுக்களிலிருந்து வித்தியாசமாக உணரும் கட்டி அல்லது தடித்தல்.
2. முலைக்காம்பு மாற்றங்கள்.
3. மார்பகத்தின் அளவு, வடிவம் அல்லது தோற்றத்தில் மாற்றம்.
4. மார்பகத்தின் மேல் தோலில் ஏற்படும் மாற்றங்கள்.
5. முலைக்காம்பு (ஐசோலா) அல்லது மார்பக தோலைச் சுற்றியுள்ள
சருமத்தின் பகுதி உரித்தல்.
6. ஒரு ஆரஞ்சு பழத்தின் தோல் போல, உங்கள் மார்பகத்தின் தோல் சருமம் சிவத்தல் அல்லது சிறுசிறு குழியாக காணப்படுதல்.

மார்பக புற்றுநோயைக் கண்டறிதல் முறைகள் :

1. மார்பக பரிசோதனை
2. மார்பக அல்ட்ராசவுண்ட்
3.மேமோகிராபி
4.மார்பக செல்கள் மாதிரியை சோதனை செய்தல் (பயாப்ஸி).

மார்பக பரிசோதனை வழிமுறைகள் :

1. 20 முதல் 40 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுக்கு, ஸ்கிரீனிங் (ஆரம்பகால கண்டறிதல்) வழிகாட்டுதல்கள் பின்வருமாறு :

மருத்துவ மார்பக பரிசோதனையானது ஒவ்வொரு 1 முதல் 3 வருடங்களுக்கும் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பரிசோதனை செய்வது நடைமுறைக்கு மாறாக தோன்றலாம், ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மருத்துவரை சந்திக்க வேண்டும்.

2. 40 வயதிற்கு மேற்பட்ட ஒரு பெண்ணுக்கு, ஆரம்ப ஸ்கிரீனிங் நெறிமுறை பின்வருமாறு :

வருடாந்திர மருத்துவ மார்பக பரிசோதனையை தகுதிவாய்ந்த மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளர்களிடம் செய்வது அவசியம்.40 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வருடாந்திர மேமோகிராபி பரிந்துரைக்கப்படுகிறது. 50 வயதிற்குப் பிறகு, ஒவ்வொரு 2 வருடங்களுக்கும் மேமோகிராபி செய்யலாம்.

Case History :
பவானி எனும் நடுத்தர வயது பெண். அவருக்கு கல்லூரிக்கு செல்லும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவர் இஸ்திரி
வேலை செய்பவர். பவானிக்கு வலது மார்பில் டென்னிஸ் பந்து அளவில் கட்டி இருந்தது, உடல் வலி பொறுத்துக்கொள்ள முடியாமல் மருத்துவரை அணுகினார். சில பரிசோதனைகளுக்கு பிறகு அவருக்கு புற்று நோய் இருப்பது தெரியவந்தது.

மூன்று மாத காலமாகவே வலது பக்க மார்பின் கீழ் சிறிய அளவு கட்டி இங்கும் அங்கும் நகர்ந்து கொண்டிருந்தது, அதை பொருட்படுத்தாமல் இருந்து விட்டேன் என்று புலம்பினார். உடலில் எந்த இடத்தில் கட்டி இருந்தாலும், அதை அலட்சிய படுத்த கூடாது. அந்தரங்க இடத்தில கட்டி வந்தால், வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை, புற்று நோய் கட்டி என்றவுடன் பதட்டம் அடைவது இயல்பு தான். ஆனால், மருத்துவ துறையில் முன்னேற்றமும் இருப்பதையும் உணர வேண்டும். ஆரம்பநிலையில் புற்று நோய் கண்டறியப்பட்டால் , குணப்படுத்துவது எளிது. பவானிக்கு ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டதால், கட்டியை அறுவை சிகிச்சை செய்து நீக்க முடிந்தது. இதுவே முற்றிய நிலையில் கண்டறியப்பட்டு இருந்தால், மார்பையே எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.

உங்கள் பரம்பரையில் யாருக்காவது புற்று நோய் வந்து இருந்தால், 35 வயது ஆனவுடன் வருடம் ஒரு முறை Master health செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஒழுக்கமான வாழ்க்கை முறையை பின்பற்றினால் உயிரணுக்கள் ஆரோக்கியமாக செயல்படும். உங்கள் மார்பில் மாற்றம் தென்பட்டால், உடனே நீங்கள் உங்கள் Gyneacologist-ஐ அணுகி பரிசோதனை செய்து கொள்வது முக்கியம். பரிசோதனைக்கு பின் மருத்துவர் பரிந்துரைத்தால் நீங்கள் Mamogram எடுத்துக்கொள்ளலாம்.

பெண்கள் அவ்வப்பொழுது மார்பை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். மார்பக விழிப்புணர்வு என்பது, ஒருவரின் சொந்த மார்பகத்தை பற்றி தெரிந்திருப்பதைக் குறிக்கிறது. குளிக்கும் போது மாதந்தோறும் ஒரு சுய பரிசோதனை செய்து கொள்ளலாம். முக்கியமாக மாதவிடாய் முடிவில் பரிசோதனை செய்வது சிறந்தது. மார்பகத்தில் எந்தவொரு முறையற்ற தன்மை, மற்றும் கட்டிகள், தோல், முலைக்காம்பு போன்றவற்றை கவனத்தில் கொள்ள இது உதவுகிறது.

மேலும், மார்பக விழிப்புணர்வு மார்பக புற்றுநோய் பற்றிய அறிவையும் கொண்டுள்ளது. மார்பகத்தில் புற்றுநோய் உருவாகும்போது மார்பகத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதை ஒரு பெண் அறிந்திருக்க வேண்டும்.

மார்பக புற்றுநோய்க்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது..?

மார்பக புற்றுநோய் பல வழிகளில் சிகிச்சையளிக்கப்படுகிறது. இது மார்பக புற்றுநோயின் வகை மற்றும் அது எவ்வளவு தூரம் பரவியது என்பதைப் பொறுத்தது. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட சிகிச்சையைப் பெறுகிறார்கள்.

home remedy for breast cancer


1. அறுவை சிகிச்சை : புற்றுநோய் திசுக்களை மருத்துவர்கள் வெட்டியெடுக்கும் ஒரு அறுவை சிகிச்சை.

2. கீமோதெரபி : புற்றுநோய் செல்களை சுருக்க அல்லது கொல்ல சிறப்பு மருந்துகளைப் பயன்படுத்துதல். மருந்துகள் மாத்திரைகளாக அல்லது உங்கள் நரம்புகளில் கொடுக்கப்படும் மருந்துகளாக இருக்கலாம். சில நேரங்களில் இரண்டும் இருக்கலாம்.

3. ஹார்மோன் சிகிச்சை : புற்றுநோய் செல்கள் வளரத் தேவையான ஹார்மோன்களைப் பெறுவதைத் தடுக்கிறது.

4. உயிரியல் சிகிச்சை : புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட அல்லது பிற புற்றுநோய் சிகிச்சையிலிருந்து பக்க விளைவுகளைக் கட்டுப்படுத்த உங்கள் உடலின் நோயெதிர்ப்பு அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது.

5. கதிர்வீச்சு சிகிச்சை : புற்றுநோய் செல்களைக் கொல்ல உயர் ஆற்றல் கதிர்களைப் பயன்படுத்துதல் (எக்ஸ்-கதிர்களைப் போன்றது).

மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு
மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பது பொது சுகாதாரக் கொள்கைகளில் இணைக்கப்பட வேண்டும். இந்தியாவில் தற்போது 2.25 மில்லியன் புற்றுநோயாளிகளுக்கு வெறும் 1,250 புற்றுநோயியல் நிபுணர்கள் உள்ளனர். 2040 வாக்கில், தேவையை சமாளிக்க, நாட்டிற்கு 7,300 புற்றுநோய் மருத்துவர்கள் தேவைப்படுவார்கள்.

WHO குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கான
பரிந்துரைக்கப்பட்ட உத்திகள் பின்வருமாறு,
1.ஆரம்ப கட்டத்தில் கண்டறிதல்
2. ஆரம்ப அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வு
3. மருத்துவ மார்பக பரிசோதனை மற்றும் மேமோகிராஃபி ஸ்கிரீனிங்
4. தொலைநோக்கு கொண்ட நீண்ட கால நல திட்டத்தை வகுத்தல்
5. நல்ல சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளால் மட்டுமே இது சாத்தியமாகும்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter