இளநரையைத் தடுக்க எளிதான வழிகள் !!

Post a Comment
வயதாகிவிட்டதை குறிக்கும் ஒரு இயற்கை செயல் தான் வெள்ளை முடி வருவது. அனைவருக்குமே ஒரு காலத்தில் நமது முடி நரைக்கும் என்பது தெரியும். ஆனால் அத்தகைய முடி 40 அல்லது 50-ல் தான் வெள்ளையாகும் என்று நினைப்போம். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு 20 வயதிலேயே முடியானது நரைக்கஆரம்பித்துவிடுகிறது. இவ்வாறு கூந்தல் நரைப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணத்தை சரியாக தெரிந்து கொண்டால், இளமையிலேயே கூந்தல் நரைப்பதை தடுக்கலாம்.

நரை முடி வருவதை தடுப்பது எப்படி?


இன்றைய அவசர மார்டன் வாழ்க்கை முறையில் அனைத்து இளம் தலைமுறையினருக்கும் உள்ள பிரச்சனை தான் நரை முடி. ஏனெனில் அவர்கள் நிறைய டென்சன், மனஅழுத்தம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே தான் விரைவிலேயே நரை முடி வருகிறது. உங்களுக்கு தெரியுமா?

வயதானவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள், டென்சனுடன இருப்பதால் தான், அவர்களுக்கு நரை முடி ஏற்படுகிறது. ஆகவே அத்தகைய டென்சனை சிறுவயதிலேயே வந்தால், நரை முடியும் வந்துவிடும். எனவே எப்போதும் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும்.

தற்போதைய ஆய்வு ஒன்றில் தலையில் அதிகமான அளவில் பொடுகு இருந்தால், விரைவில் நரை முடி வந்துவிடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே எப்போதும் தலையை சுத்தமாக, பொடுகில்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் தலையில் உள்ள பொடுகு நீக்குவதற்கு ஹென்னாவுடன், எலுமிச்சை சாறு சேர்த்து தடவி குளித்து வந்தால், பொடுகு எளிதில் நீங்கிவிடும்.

ஊட்டச்சத்து குறைப்பாட்டால் நரைமுடி


நரை முடி உடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டாலும் வரும். அதிலும் தற்போது உள்ள இளம் தலைமுறையினர் ஸ்லிம்முடன் இருக்க வேண்டும் என்பதற்காக டயட்டில் இருக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நரை முடியானது வருகிறது.

கூந்தல் வெள்ளையாவதற்கு உடலில் காப்பர் சத்து குறைவாக இருப்பது முக்கிய காரணம் என்று தற்போதைய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் காப்பர் தான், உடலில் உள்ள நிறமூட்டும் மெலனின் என்னும் நிறமியை அதிகம் உற்பத்தி செய்கிறது.

ஆகவே இத்தகைய சத்து குறைபாட்டினால், கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் அளவு குறைந்து, வெள்ளை முடி ஏற்படுகிறது. மேலும் இந்த காப்பர் சத்து கடல் உணவுகளில் அதிகம் உள்ளது. அதிலும் நண்டில் அதிகம் உள்ளது. சைவ உணவு என்றால் எலுமிச்சை மற்றும் காளானில் இந்த சத்து உள்ளது.

வெள்ளை முடிக்கு தெரியாத காரணம்


சிலசமயங்களில் எந்த காரணத்தினால் வெள்ளை முடி வருகிறது என்று சொல்லமுடியவில்லை என்று இருப்பவர்கள், அதனை நீக்க ஒரு இயற்கை மருத்துவத்தை மேற்கொள்ளலாம். அது பீர்க்கங்காயின் சதைப் பகுதியை நன்கு அரைத்து, தேங்காய எண்ணெயில் ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை கூந்தலுக்கு தடவி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும்.

இந்திய மக்களின் கருமையான கூந்தலுக்கான இரகசியம் கறிவேப்பிலை. இத்தகைய கறிவேப்பிலையை சமையலில் சேர்த்தும் சாப்பிடலாம் அல்லது வெதுவெதுப்பான எண்ணெயில் ஊற வைத்து, கூந்தலுக்கு தடவி வரலாம். ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், கருமையான கூந்தல் வெள்ளையாவதை தடுக்கலாம்.

ilanarai thadukka


இளநரையை தடுக்க 10 குறிப்புகள் 1. நெல்லிக்காயை தினமும் ஒன்று என்று சாப்பிட்டு வர, நமது உடலில் நோய் எதிர்ப்பு பெருகும். மேலும் அதிலுள்ள வைட்டமின் "சி" முடியை கருமையடையச் செய்யும்.

2. மருதாணி இலையை அரைத்து எண்ணெயில் போட்டு காய்ச்சி பூசி வந்தால், இளநரையானது விரைவில் நீங்கும்.

3. கறிவேப்பிலையை சமைக்கம் உணவில் அதிகம் சேர்த்து, அதனை சாப்பிட்டால் உடலில் இரும்புச்சத்து அதிகமாகி கூந்தலானது கருமையாக வளரும்.

4. நான்கு ஸ்பூன் மருதாணிப் பொடி, இரண்டு ஸ்பூன் காபி அல்லது டீ டிகாஷன், ஒரு முட்டை, அரை ஸ்பூன் விளக்கெண்ணெய் ஆகியவற்றை கலந்து, தலையில் நன்றாக தேய்த்து, ஒரு மணிநேரம் ஊற வைத்துப் பின் கூந்தலை குளிர்ந்த நீரில் அலசினால் இளநரையானது படிப்படியாக குறையும்.

5. கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி, கூந்தலுக்கு தடவி வந்தால் இளநரையானது வராமல் இருக்கும்
.
6. வெள்ளைப் பூவான கரிசாலையை நன்கு காய வைத்து, அரைத்து பொடி செய்து, ஒரு மாதம் இளநீரிலும், ஒரு மாதம் தேனிலும் கலந்து உண்ண வேண்டும். இதனால் இளநரை மாறும்.

7. தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து தலைக்கு பூசி நன்கு மசாஜ் செய்து, குளித்து வந்தால், இளநரையானது போகும்.

8. கடுக்காய்த்தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்துப் பொடியாக்கி வைத்துக் கொண்டு தினமும் 3 கிராம் வீதம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை சக்தி அத்கரிக்கும். கண் குளிர்ச்சியுடன் சளியினால் ஏற்படும் தலைவலியும் நீங்கும்.

9. வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம் சேர்த்து பொடியாக்கி தினசரி இரவு தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகமாகும்.

10.பாலில் சிறிது மஞ்சள் பொடி, மிளகுப் பொழி, பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால் நாள்பட்ட சளி, இருமல் கூட குறைந்து விடும்.

11.சிறிது சீரகம், ஒரு கிராம்பு, இரண்டு மிளகு ஆகியவற்றை பசும்பால் விட்டு அரைத்து நெற்றொயில் பூசிக் கொண்டால் தீராத தலைவலி போய்விடும்.
12. காய்ந்த நெல்லிக்காயைப் பொடியாக்கித் தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டித் தேய்த்து வந்தால் வெள்ளை முடி கூட கருமையாகிவிடும். முடி உதிர்வதும் இருக்காது.

13. கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை இவற்றைப் பாலில் அரைத்து முகத்தில் சுருக்கம் உள்ள பகுதிகளில் பூசி 30 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் சுருக்கம் மறையும். தேமல், கரும்புள்ளிகளும் நீங்கும்.

ஆகவே மேற்கூறிய இயற்கையான உணவினாலும், சரியான பராமரிப்பாலும் இளநரையை வராமலும், வந்த இளநரையை போகவும் செய்யலாம்.

#இளநரை #கருமுடி #நரைமுடி #இளநரைக்கு #இயற்கை #வைத்தியம்

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter