லவ் பண்ணினா வெயிட் லாஸ் ஆகுமாம்..! அதுவும் ஒரே வாரத்துல 10 கிலோ... இதென்னாய்யா புது கதையா இருக்கு..!


காதலித்தா கவிதை வரும்னுதான் சொல்வாங்க. ஆனா பாருங்க இங்க காதல் செய்தால், அதானால் உற்பத்தி ஆகும் ஹார்மோன் சுரப்பால் வெகுவாக எடை குறையுமாம். இது ஆச்சர்யமான தகவல். எப்படின்னு விரிவா தெரிஞ்சுக்கலாம் வாங்க.

காதல் ஹார்மோன் என்னென்ன செய்யும் என்பது எல்லோரும் அறிந்ததுதான். இது உடல் எடை பராமரிப்பிலும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்கிறது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Endocrine society.மூளையில் சுரக்கும் ஆக்ஸிடோஸின் என்னும் ஹார்மோன் சமூக தொடர்பு, நம்பிக்கை, கவலை, பாலியல் இனப்பெருக்கம், பிரசவம், தாய்-குழந்தை பிணைப்பு ஆகியவற்றில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இதைத்தான் Love hormone என்கிறார்கள். தாய்ப்பால் சுரப்பிலும் ஆக்சிடோஸின் முக்கிய பங்கு வகிக்கிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆக்சிடோசின் ஹார்மோன் உணவுக்கான மூளை வெகுமதி சமிக்ஞைகளை பலவீனப்படுத்துவதாகவும், அது நமது சாப்பாடு நடத்தை மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

weightloss love

இதற்காக ஆரோக்கியமான, உடல் பருமனுள்ள 10 இளைஞர்களை இரண்டு முறை வரவழைத்து ஆக்சிடோஸின் நாசில் ஸ்ப்ரேவை சிங்கிள் டோசாக கொடுக்கப்பட்டு சோதனை செய்தார்கள். மருந்து செலுத்தப்பட்டு ஒரு மணி நேரத்தில் வெண்திரையில் அதிக கலோரி, குறைந்த கலோரி உணவுகள் மற்றும் உணவல்லாத படங்களும் காட்டப்பட்டன. அவர்களின் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை நியூரோ இமேஜிங் முறையில் சோதித்தார்கள்.

ஆக்சிடோஸின் கொடுக்கப்படாதபோது உணவுத்தேவைக்கான ரிவார்ட் சென்டர் தூண்டப்பட்டதையும், அதிகமாக உண்ண வேண்டும் என்ற வேட்கையும் ஏற்பட்டது. ஆக்சிடோஸின் கொடுக்கப்பட்டபோது மனம் அமைதியடைந்த உணர்வு ஏற்பட்டதால் உணவுத்தேவை சீராகவும், ஆரோக்கியமானதாகவும் அமைந்தது.

'ஆக்சிடோஸின் ஹார்மோன் சுரக்காத போது மன அழுத்தத்துக்கு ஆளாகி அதிகமாக உண்ண வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதுதான் இதன் முக்கிய காரணம். எனவே, உடல் பருமன் சிகிச்சையில் ஆக்சிடோஸின் மருந்து நல்ல பயனிக்கக்கூடும் என்பதை இதிலிருந்து கண்டறிந்திருக்கிறோம்' என்று இது பற்றி தெரிவித்திருக்கிறார் ஆய்வுக்குழுவின் தலைவரான டாக்டர் கெரோம்.

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த நாளமில்லா சுரப்பியலாளர்கள் கூட்டத்தில் ஆண்டு அறிக்கையாக ENDO 2019 என்ற பெயரில் இதனை Endocrine Society சமர்ப்பித்திருக்கிறது.

Post a Comment

0 Comments