படர்தாமரை நீங்க பாட்டி வைத்தியம் !

பூஞ்சையினால் ஏற்படக்கூடிய படர்தாமரை எனும் நோய் கோடைக்காலங்களில் தோலில் அதிகமாக ஏற்படுகிறது.

இது. பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்கும்.

பிறப்புறுப்பில் தொடங்கி, தொடை இடுக்குகளில் பரவும் இந்த நோயால் சொறியப்படும் இடம், சினைப்புகள் சிவந்திருக்கும். இந்த நோய், வேதனையான அரிப்பை பல முறை உண்டாக்கும்.

padarthamarai neenga patti vaithiyam



காரணம் என்ன?


‘ஃபங்கஸ்’ (Fungus) என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம். மக்கள்தொகை பெருக்கம், பொதுச் சுகாதாரக் குறைவு, உடலில் அதிகம் வியர்ப்பது போன்ற காரணங்களால் காளான் நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

padar thamarai neenga patti vaithiyam

சுயச் சுத்தம் குறைவாக உள்ளவர்களுக்கும், உடல் பருமன், நீரிழிவு உள்ளவர்களுக்கும், ஊட்டச்சத்து குறைந்தவர்களுக்கும் மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் வசிப்போருக்கும் தண்ணீரில் அதிகம் புழங்குபவர் களுக்கும் காளான் கிருமிகள் பாதிக்கிற வாய்ப்பு அதிகம்.

இந்தக் கிருமிகள் மண்ணிலும், மனிதர்கள் மற்றும் விலங்குகளிடத்திலும் வசிக்கக்கூடியவை. எனவே, காளான் நோயுள்ள ஒருவருடன் நெருங்கிப் பழகும்போதும், வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளிடமிருந்தும் இது பரவ வாய்ப்புள்ளது.

அசுத்தமான இடங்களில் குழந்தைகள் விளையாடும்போது மண்ணிலிருந்து கிருமிகள் பரவி நோய் வருவதுண்டு.

padar thamarai vaithiyam

அறிகுறிகள் மற்றும் ஏற்படும் இடங்கள்

படர் தாமரை பரவிய இடங்களில், தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கறுப்பு நிறமாகிவிடும். தீராத அரிக்கும் தன்மை உடையது. இதை சொறிந்துவிட்டால் அதிலிருந்து வெளியாகும் நீர்மத்தினால், மற்ற பாகங்களுக்கும் பரவும்.

படர தாமரை, தலையில் தாக்கினால், அரிப்பை ஏற்படுத்தும். இதனால் தலைமுடி பாதிக்கப் பட்டு, சிவப்பு படர்தாமரை வளையங்கள் தோன்றி நமைச்சல் அதிகரிக்கும். உடலில் எங்கு வேண்டுமானாலும், இந்த படர்தாமரை வரும்.

பாக்டீரியா தாக்குதல், நகத்தில் சிதைவை ஏற்படுத்தும். கால் விரல் நகங்களில் அதிகம் வரும். அவ்வப்போது கால் விரல்களை கவனித்து நகங்களை வெட்டிவிட வேண்டும்.

படர் தாமரை ஒருவருக்கொருவர் தொற்றிக் கொள்ளும் சரும வியாதி. அந்த நுண்ணுயிர்களுக்கு பிடித்த ஈரமான இடம் கால் விரல்களின் இடுக்கு. இது, முதலில் சிறு பகுதியில் தாக்கி, பாதம் முழுவதும் புண்ணாகும்.

படர் தாமரை பரவும் இடங்கள் அக்குள், பிறப்புறுப்பு, தொடை, தொடை இடுக்குகள், கால் நகங்கள், கழுத்து மடிப்பு கால் இடுக்குகள், பெண்களுக்கு மார்பகங்களின் கீழ் சதை மடிப்புகளில் வரும்.

முக்கியமாக, வீட்டு வேலை செய்யும் பெரும்பாலான பெண்களுக்கு இடுப்பைச் சுற்றி, இந்தத் தொற்று இருக்கும்.

இவர்களுக்கு அதிகமாக வியர்க்கும் என்பதாலும், ஈரம் அதிகம் இருக்கும் இடங்களில் அதிக நேரம் பணி செய்வதாலும் கை, கால்களில், ஈரத்தில் இருக்கும் காளான் கிருமிகள் எளிதாகத் தாக்கி நோயைத் தருகின்றன. வீட்டில் ஒருவர் உடுத்திய சேலை, சுடிதார், உள்ளாடை போன்றவற்றை அடுத்தவர் உடுத்தும்போது, இது மிக எளிதில் பரவிவிடுகிறது.

சிகிச்சைகள்

படர்தாமரை தாக்காமல் இருக்க, காலை, இரவு என, இரு வேளைகளிலும், சுத்தமான நீரில் குளிக்க வேண்டும்.

அழுக்கு துணிகளை பயன்படுத்தக் கூடாது. சலவை செய்த துணிகளையே பயன்படுத்த வேண்டும். இவற்றை பின்பற்றினால் படர்தாமரையை தடுக்க முடியும்.

clotrimazole, miconazole போன்ற களிம்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

மிளகை நெய்யுடன் சேர்த்து நன்கு அரைத்து இரவு படுக்கப் போகும் முன்பாக படர்தாமரை உள்ள இடத்தில் பூசி வைத்திருந்து காலையில் சீயக்காய் பொடியை தேய்த்து கழுவிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உடலில் ஏற்படும் படர்தாமரை குறையும்.

அறுகம்புல்லும், மஞ்சளும் சம அளவு எடுத்து அதை நன்கு அரைத்து படர்தாமரையில் பூச படிப்படியாக படர்தாமரை மறையும்.

பூவரசங் காயை உடைத்தால் அதில் மஞ்சள் நிறமான திரவம் வெளிவரும். இதனை படர்தாமரை, தேமல் மீது தடவினால் தேமல், படர்தாமரை குறையும்.


சந்தனக்கட்டையை எலும்மிச்சம்பழம்சாற்றில் உரைத்து பசையாக செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் படர்தாமரை குணமாகும்.

Post a Comment

0 Comments